News August 22, 2025

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியா?

image

விஜயகாந்த் பாணியில் விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா களமிறங்க உள்ளதாக பேச்சு எழுந்த நிலையில், புதிய விளக்கத்தை அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய பிரேமலதா, இன்னும் கூட்டணி முடிவாகவில்லை, கூட்டணி முடிந்த பிறகு எந்தெந்த தொகுதிகள், யார் யார் போட்டி என்பதை அறிவிப்போம் என்றார். மேலும், ஜன.9-ம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள மாநாட்டில்தான் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

Similar News

News April 2, 2026

ஹார்முஸ் நீரிணையில் வசூலை தொடங்கிய ஈரான்

image

ஹார்முஸ் நீரிணையை கடக்க கப்பல்களிடம் ஈரானின் IRGC கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளது. ஒரு பேரல் எண்ணெய்க்கு ஒரு டாலர் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அவ்வழியாக கப்பல் இயக்குபவர்கள், IRGC-ஐ தொடர்பு கொண்டு செல்லும் இடம் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பித்து கட்டணம் செலுத்த வேண்டும். அக்கப்பலுக்கு US, இஸ்ரேலுடன் தொடர்பில்லை என உறுதிப்படுத்திய பிறகு ஹார்முஸ் நீரிணையை கடக்க Permit Code அளிக்கப்படுகிறது.

News April 2, 2026

ஏப்ரல் 2: வரலாற்றில் இன்று

image

*உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் *1881 – இந்திய விடுதலைப் போராட்டக்காரர் வ.வே.சு.ஐயர் பிறந்தநாள் *1884 – தமிழறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பிறந்தநாள் *1924 – நாதஸ்வர கலைஞர் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் பிறந்தநாள் *1984 – விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ராகேஷ் சர்மா பெற்றார் *2011- 28 ஆண்டுகளுக்கு பிறகு 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வென்றது

News April 2, 2026

ஆண்களை திருமண வலையில் வீழ்த்திய பலே கில்லாடி

image

ராஜஸ்தானில் திருமண ஆசை காட்டி பல ஆண்களை ஏமாற்றிய ரேகா கவுர் என்பவரை போலீஸ் தேடி வருகிறது. திருமணம் முடிந்தவுடன் மணமகனின் வீட்டில் இருந்து நகை, பணத்துடன் தப்பிப்பதே அவரது வாடிக்கையாகும். இந்நிலையில் விக்ரம்ஜீத்தை மணந்த ரேகா கவுர், அவருடைய வீட்டில் இருந்து தப்பிக்க மாமியாருக்கு விஷம் வைத்துள்ளார். முதலில் ரேகா கவுர் காணாமல் போனதாக எண்ணிய விக்ரம்ஜீத், பின்னர் உண்மையை அறிந்து மனமுடைந்தார்.

error: Content is protected !!