News June 25, 2024
பொட்டு அம்மான் உயிருடன் உள்ளாரா?

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்படவில்லை, உயிருடன் இருக்கிறார் என அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. அதேபோல், தற்போது விடுதலைப்புலிகள் இயக்க புலனாய்வு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் உள்ளதாகக் கூறி, அவரின் புதிய புகைப்படமொன்றை சிலர் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா? இல்லை, பிரபாகரன் குறித்து வரும் தகவல் போல் இதுவும் வதந்தியா? எனத் தெரியவில்லை.
Similar News
News November 27, 2025
மாநகரின் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம் அறிவிப்பு

மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவுபடி திருநெல்வேலி மாநகரில் இன்று இரவு முதல் நாளை நவம்பர் 27 காலை 6 மணி வரை காவல் பணியில் உள்ள முக்கிய உயர் அதிகாரிகள் குறித்த விவரத்தை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது அவர்களது கைபேசி எண் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது இரவு அவசர காவல் உதவி தேவைப்படும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News November 27, 2025
ராசி பலன்கள் (27.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 27, 2025
விஜய்யை மீண்டும் சீண்டிய சீமான்

திருச்சியில் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற உள்ள நாதகவின் மாநாட்டுக்கு உங்கள் பரம்பரையை அழைத்து வர வேண்டும் என தொண்டர்களுக்கு சீமான் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நடிகனுக்கு தான் கூட்டம் கூடுமா, தற்குறி பயதான் கூடுவானா, தத்துவகாரனுக்கும் கூட்டம் கூடும் என விஜய்யை மறைமுகமாக சாடினார்.234 தொகுதிகளிலும் போட்டியிடும் நாதக தமிழகத்தில் பெரிய கட்சி என்றும் சீமான் கூறியுள்ளார்.


