News February 16, 2025
பாப்கார்னுக்கு 18% ஜிஎஸ்டி வரியா? CBIC விளக்கம்

பாப்கார்னுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு இருப்பது குறித்து CBIC விளக்கமளித்துள்ளது. சாப்பிடத் தயாராக சில்லரையில் அளிக்கப்படும் பாப்கார்னுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்று CBIC தெரிவித்துள்ளது. தியேட்டர் போன்ற இடத்தில் உப்பு, காரத்துடன் லேபில் இட்டு அளிக்கப்பட்டால் 12%, இனிப்புடன் கலந்து அளிக்கப்பட்டால் 18% வரி விதிக்கப்படுகிறது எனவும் விளக்கமளித்துள்ளது.
Similar News
News December 5, 2025
டெல்லி வரை சென்றும் வாய் திறக்காத விஜய்

சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தீவிரமாகியுள்ளது திருப்பரங்குன்றம் விவகாரம். ஆனால், இதுவரை விஜய்யின் தவெக தரப்பில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படாமல் இருப்பது பேசுபொருளாகியுள்ளது. பொதுக்கூட்ட பணியில் பிஸியாக இருக்கும் தவெக தலைமை, தமிழகத்தின் தற்போதைய சமூக பிரச்னைக்கு குரல் கொடுக்குமா என்பதே விர்ச்சுவல் வாரியர்ஸின் எதிர்பார்ப்பாக உள்ளது. உங்கள் கருத்து என்ன?
News December 5, 2025
புடினுக்கான விருந்தில் சசி தரூர் IN.. ராகுல் OUT!

ஜனாதிபதி இல்லத்தில் இன்று இரவு ரஷ்ய அதிபருக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க ராகுல் காந்தி மற்றும் கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாம். மாறாக, காங்., MP சசிதரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திக்கும் மரபு, பாஜக ஆட்சியில் மீறப்படுவதாக ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார்.
News December 5, 2025
கோலி vs ரோஹித்: NO.1 இடத்தை பிடிக்கப்போவது யார்?

தற்போது ODI தரவரிசையில் ரோஹித் முதலிடத்திலும் (783 புள்ளிகள்), கோலி 4-ம் இடத்திலும் (751 புள்ளிகள்) உள்ளனர். இந்நிலையில், நாளை நடக்கும் IND vs SA போட்டியில், ரோஹித் அடிக்கும் ரன்களை விட, கூடுதலாக 50+ ரன்கள் கோலி அடித்தால், அவர் தரவரிசையில் NO.1 இடத்தை பிடிப்பார். இருவரும் ஒரே ரன்களை அடித்தால், ரோஹித் முதலிடத்தையும், கோலி 2-ம் இடத்தையும் பிடிப்பார். நாளை எது நடக்க வேண்டும் என நினைக்கிறீங்க?


