News April 27, 2025
விஜய்யுடன் கைகோர்க்கிறதா பாமக? புது ரூட்டில் ராமதாஸ்

தவெக உடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA-ல் பாமக அங்கம் வகிக்கும் நிலையில், ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், 2026 தேர்தலில் விஜய் உடன் கைகோர்க்க ராமதாஸ் முடிவெடுத்துள்ளதாக பேசப்படுகிறது. ஆனால், NDA-ல் தனது பேர வலிமையை கூட்டுவதற்காக, பாமக கையிலெடுத்த அஸ்திரமே விஜய் உடனான கூட்டணி பேச்சுவார்த்தை என்கிறார்கள் விமர்சகர்கள்.
Similar News
News October 29, 2025
பிரபல நடிகர் மரணம்.. மனைவி உருக்கம்

2021-ம் ஆண்டு இதே நாளில் கன்னட திரையுலகமே சோகத்தில் உறைந்தது. கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்த புனித் ராஜ்குமாரின் இழப்பே அதற்கு காரணம். 46 வயதிலேயே அவரது உயிரை மாரடைப்பு பறித்தது பெரும் சோகம். சோஷியல் மீடியாவில் திரைபிரபலங்களும், ரசிகர்களும் புனித்தின் நினைவலைகளை இன்று பகிர்ந்து வருகின்றனர். அவரது மனைவி அஷ்வனியும், ‘அப்புவை 4-வது ஆண்டாக அன்புடன் நினைவுகூர்கிறேன்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
News October 29, 2025
UNESCO பட்டியலில் 7 இந்திய தளங்கள்

UNESCO-வின் தற்காலிக பட்டியலில், இந்தியாவில் இருந்து 7 புதிய தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், தற்காலிக பட்டியலில் இந்தியாவில் இருந்து மொத்தம் 69 தளங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த 7 தளங்கள், அடுத்த 5-10 ஆண்டுகளில், உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்படலாம். அவை எந்தெந்த தளங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்தது எது?
News October 29, 2025
தடுப்பூசி போடுவதால் ஆட்டிசம் ஏற்படுமா?

குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசிகள் ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்துவதாக X-ல் ஒரு ஆய்வறிக்கை வெளியானது. அதை சுட்டிக்காட்டி, இந்திய பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டும் என ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டிருந்தார். அதில் கமெண்ட் செய்த டாக்டர் சிரியாக், இதுபோன்ற பூமர் அங்கிள் சொல்வதை பெற்றோர்கள் கேட்க வேண்டாம், அந்த ஆய்வறிக்கை தடுப்பூசிக்கு எதிரானவர்களால் பணம் கொடுத்து பரப்பபடுவது என்றும் விமர்சித்துள்ளார்.


