News June 5, 2024
ராஜினாமா செய்கிறாரா பிரதமர் மோடி?

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இக்கூட்டத்திற்குப் பின் பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், மொத்த அமைச்சரவையையும் கலைத்துவிட்டு கூட்டணி கட்சிகளுடன் தே.ஜ. கூட்டணி புதிய அமைச்சரவையை அமைக்க வாய்ப்புள்ளது. என்ன செய்யப் போகிறார் மோடி?
Similar News
News March 19, 2026
தேர்தல் ஆணையத்தின் கையில் ‘ஜன நாயகன்’

‘ஜன நாயகன்’ படத்தின் மறுதணிக்கையில், ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்த காட்சிகள் நீக்கப்பட்டதால் வாரிய அதிகாரிகள் திருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் நடந்த இத்தணிக்கையை அடுத்து ரிலீஸ் அனுமதிக்காக ECI-க்கு அனுப்பப்பட்டுள்ளதாம். படத்தின் நாயகனான விஜய் அரசியல் கட்சி தலைவராக உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளின்படி ’ஜன நாயகன்’ படத்தை ஆய்வுசெய்து ரீலிஸ் குறித்து ECI முடிவெடுக்குமாம்.
News March 19, 2026
பாஜக பயம்காட்டி கூட்டணி கட்சியை நெருக்குகிறதா திமுக?

சிபிஐ கட்சிக்கு, <<19413766>>5 இடங்களையே<<>> திமுக ஒதுக்கியுள்ளது. மேலும் சிபிஎம், விசிக கட்சிகளிடமும் திமுக கறார் காட்டுகிறது. மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கும் இடதுசாரிகள், விசிக போன்றவை, இந்த ஆட்சியில் தங்கள் போர்க்குணத்தை கைவிட்டு மென்மை போக்கையே கடைப்பிடிக்கின்றன. தங்கள் விமர்சனம் பாஜக-அதிமுகவுக்கு பலம் சேர்த்துவிடக் கூடாது என்ற எண்ணமே அதற்கு காரணம். இதையே திமுக தனக்கு சாதகமாக்கி நெருக்கடி தருகிறதா?
News March 19, 2026
‘Jan Dhan’ வங்கிக் கணக்கில் பணம்.. மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் 57.80 கோடி ‘ஜன்தன்’ வங்கிக் கணக்குகளில் சுமார் ₹3 லட்சம் கோடி டெபாசிட் இருப்பதாக பார்லிமென்ட்டில் FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஜன்தன்’ வாடிக்கையாளர்களுக்கு ₹39.45 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில், 55% பெண்களின் வங்கிக் கணக்குகள் எனவும் அவர் கூறியுள்ளார். ‘ஜன்தன்’ அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை. Overdraft மூலம் ₹10,000 ஈஸியாக கடன் பெறலாம்.


