News September 11, 2025
அடகு வைத்த நகை மூழ்கும் அபாயமா? இதை பண்ணுங்க

கடன் வாங்க, இருப்பதிலேயே எளிமையான வழி என்றால் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவது தான். ஆனால் சிலரால் இந்த கடனை அடைக்கமுடியாததால் அவர்களது நகை மூழ்கிவிடுகிறது. EMI தொகையை உங்களால் செலுத்த முடியவில்லை என்றால், அதற்கான காரணத்தை வங்கியிடம் விளக்கி, கடன் மறுசீரமைப்பு செய்யுமாறு கேட்கலாம். இது தவிர, நிலுவைத் தொகையில் பாதியை கட்டினால் உங்கள் நகையை மூழ்காமல் காப்பாற்ற முடியும். SHARE.
Similar News
News September 11, 2025
உங்க போனில் உடனே இத பண்ணுங்க!

சாலையில் மயங்கி விழுந்தால், ஹாஸ்பிடலில் யாராவது சேர்த்து விடுவார்கள். ஆனால், போன் லாக் ஆகி இருப்பதால் உறவினர், நண்பர்களுக்கு தகவல் கொடுப்பது சிரமமாகிறது. இந்த சிக்கல் ஏற்படாமல் இருக்க Lock Screen-ல் Emergency contact வைத்திருக்க வேண்டும். இதை செய்ய, settings-> Emergency contacts செல்லுங்கள். அதில், Add contact-ஐ கிளிக் செய்து, நண்பர்கள், உறவினர்கள் நம்பரை Save பண்ணுங்க. Share it to friends.
News September 11, 2025
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: தலைவர்கள் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசு சார்பில் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். திருப்பூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு EPS மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், பரமக்குடியில் நயினார், சீமான் உள்ளிட்டோரும் நேரில் மரியாதை செலுத்தினர்.
News September 11, 2025
கர்ப்பிணிகளுக்கு இலவச பிரசவம்; அசத்தல் திட்டம்

மத்திய அரசின் ஜனனி-ஷிஷு சுரக்ஷா திட்டத்தில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள கர்ப்பிணிகள் மருத்துவமனையில் அட்மிஷன் ஆவது முதல் டெலிவரி வரை அத்தனை செலவையும் அரசே ஏற்கும். அதாவது, கர்ப்பிணிகளுக்கான மருந்து, உணவு, போக்குவரத்து, பரிசோதனைகள் என அத்தனை செலவும் இலவசமாக கிடைக்கும். இத்திட்டத்தில் பயன்பெற, கர்ப்ப காலத்தில் அரசு ஹாஸ்பிடலில் பதிவு செய்து, ஜனனி சுரக்ஷா அட்டையை வாங்கிக்கொள்ளுங்கள். SHARE.