News April 23, 2025

பழிதீர்க்க நினைக்கிறதா பாகிஸ்தான்?

image

கடந்த மார்ச் மாதம் பலூசிஸ்தானில் பயணிகள் ரயிலை பலூச் விடுதலை படையினர் கடத்தினர். இந்த கடத்தலுக்கு பின்னால் இந்தியா இருப்பதாக பாக். குற்றம்சாட்டியது. அதற்கு அப்போதே இந்திய கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த ரயில் கடத்தல் சம்பவத்தை மனத்தில் வைத்து பாகிஸ்தான் பஹல்காம் தாக்குதலை அரங்கேற்றியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News January 1, 2026

ஜனவரி 1: வரலாற்றில் இன்று

image

*1877–இந்திய பேரரசின் மகாராணியாக விக்டோரியா அறிவிப்பு *1951–நடிகர் நானா படேகர் பிறந்தநாள் *1971–நடிகர் கலாபவன் மணி பிறந்தநாள் *1971–அரசியல்வாதி ஜோதிர் ஆதித்யா சிந்தியா பிறந்தநாள் *1975–நடிகை சோனாலி பிந்த்ரே பிறந்தநாள் *1978–துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா 855 போயிங் 747 விமானம் வெடித்ததில் 213 பயணிகள் உயிரிழப்பு *1979–நடிகை வித்யா பாலன் பிறந்தநாள் *1995–உலக வர்த்தக அமைப்பு உருவாக்கம்

News January 1, 2026

சிலிண்டர் விலை உயர்வு!

image

சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹110 ஏற்றப்பட்டு சென்னையில் ₹1,849.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் (14.2 கிலோ எடை) விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ₹868.50 ஆக தொடர்கிறது.

News January 1, 2026

போரில் வெற்றி பெறுவோம்: புடின்

image

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவே வெற்றிபெறும் என அதிபர் புடின் தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு ராணுவ வீரர்களுடன் உரையாடிய அவர், உங்கள் மீதும் நம் வெற்றியின் மீதும் நம்பிக்கை உள்ளதாக அவர் கூறியுள்ளார். உக்ரைனுக்கு எதிராக போராடும் ராணுவ வீரர்களுக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனிடையே, 2026 டிச.31 உடன் ஆட்சி அதிகாரத்தில் புடின் 26 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

error: Content is protected !!