News April 23, 2025
தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் உடந்தை?

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பங்கு இல்லாவிட்டால், பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் ஏன் அமைதி காக்கிறார் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கேள்வி எழுப்பியுள்ளார். பாக்., திடீரென ஹை-அலர்ட்டில் உள்ளது ஏன் எனக் கேள்வி எழுப்பும் அவர், தன் நாடு தீவிரவாதிகளை ஊக்குவித்து, அடைக்கலம் அளிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பாக்., அணியில் இருந்த ஒரே இந்து வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 17, 2025
கூட்டணி குறித்து ராமதாஸே முடிவெடுப்பார்

2026 தேர்தலில் பாமக அதிக இடங்களில் வெற்றி பெறும் நோக்கில், கூட்டணியை முடிவு செய்ய ராமதாஸுக்கே முழு அதிகாரமும் வழங்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பாமகவில் புதிய விதி 35 உருவாக்கப்பட்டு, இதன்படி எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் கூட்டணி, வேட்பாளர்கள் குறித்து ராமதாஸே முடிவெடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
ஆம்புலன்ஸில் வந்து டப்பிங் பேசிய அஜித்: ஏ.ஆர்.முருகதாஸ்

நடிகர்கள் நேரத்திற்கு சூட்டிங் வருவதே பெரிய விஷயமாக மாறிப்போன நிலையில், நடிகர் அஜித் விபத்தில் அடிப்பட்டு “ஹாஸ்பிடலில்” சிகிச்சையில் இருந்தபோது ஆம்புலன்ஸில் வந்து டப்பிங் பேசியதாக ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார். நான் உட்பட பல புதுமுக இயக்குநர்களை அஜித்தான் அறிமுகப்படுத்தினார். யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்துள்ளார். எளிதாக இந்த இடத்திற்கு அவர் வரவில்லை எனவும் தெரிவித்தார்.
News August 17, 2025
யார் பாமக தலைவர்: ராமதாஸா? அன்புமணியா?

விழுப்புரத்தில் இன்று(ஆக., 17) நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும், நிறுவனரும் ராமதாஸ் தான் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஆக., 9-ல் மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இன்னும் ஓராண்டுக்கு அன்புமணி தான் தலைவர் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் தான்தான் தலைவர் என தீர்மானம் நிறைவேற்றுவதால் பாமகவினர் குழப்பத்தில் உள்ளனர்.