News December 31, 2024
நாங்க பண்ற போராட்டம் உங்களுக்கு நாடகமா?

அண்ணா பல்கலை. வன்கொடுமை விவகாரத்தை முன்வைத்து போராட்டம் நடத்திய சீமான் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய சீமான், தவறு நடக்கும் இடங்களில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாமல் போவது எப்படி என கேள்வியெழுப்பினார். மேலும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது திமுக நடத்தினால் போராட்டம். அதுவே இப்போது நாங்கள் நடத்தினால் நாடகமா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
Similar News
News October 20, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நேற்று முன்தினம் 1 அவுன்ஸ்(28g) 44 USD குறைந்திருந்த நிலையில், இன்று(அக்.20) 63 USD உயர்ந்துள்ளது. இதனால், தற்போது, 4,262 டாலராக விற்பனையாகிறது. இந்திய மதிப்பில் 1 அவுன்ஸ் தங்கம் ₹5,538 அதிகரித்துள்ளது. ஒருவேளை பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கினால், முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் பக்கம் திரும்பும். இதனால், நம்மூரில் மீண்டும் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது.
News October 20, 2025
தலைநகரை திக்குமுக்காட வைக்கும் காற்று மாசு

தலைநகரில் 7 ஆண்டுக்கு பின் இப்போது தான் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்குள், நேற்று காசு மாசு அதிகரித்து, தரக்குறியீட்டில் 400 புள்ளிகள் சென்றுள்ளது. இந்த அளவு 50-க்கு குறைவாக இருந்தால் தான் சுத்தமான காற்று. 100-க்கு மேல் சென்றால் மோசமானது என்று அர்த்தம். டெல்லியில் உள்ள 38 கண்காணிப்பு நிலையங்களில், 12 இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்று பதிவாகியுள்ளது.
News October 20, 2025
இந்த தீபாவளியில் இருந்து இத பண்ணாதீங்க

காலையில் இந்த உணவுகளை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர் ➣அதிக கொழுப்புள்ள உணவுகள்: பூரி, பரோட்டா போன்றவற்றை காலையில் தவிர்ப்பது நல்லது ➣பதப்படுத்தப்பட்ட உணவுகள்: கொழுப்பு இறைச்சி, பிற சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் ➣அதிக சர்க்கரை: இது உடலின் கொலஸ்ட்ராலை அதிகரிப்பதோடு, ட்ரைகிளிசரைடுகளையும் அதிகரிக்கிறது. SHARE.