News October 28, 2024
வெங்காயத்தால் ஆபத்தா..? இத படிங்க முதல்ல

KFC, Burger King போன்ற நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும் உணவுகளில் வெங்காயம் சேர்ப்பதை அடியோடு நிறுத்தியுள்ளன. இதற்கான காரணம் திடுக்கிட வைக்கிறது. அதாவது, நீண்டநேரம் முன்பே slice செய்துவைத்த வெங்காயத்தில் E.Coli என்ற பாக்டீரியா உருவாகி விடுமாம். இது, குடல் சார்ந்த பிரச்னைகளையும், சில சமயங்களில் கிட்னி ஃபெயிலியர் வரை கொண்டு சென்றுவிடுமாம். ஆகவே vegetables-ஐ அரிந்தால் உடனே பயன்படுத்தி விடுங்கள்.
Similar News
News August 22, 2025
‘அம்மா, அப்பா நான் சாகப்போறேன்’.. சோக முடிவு

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா பார்லிமென்டில் நிறைவேறியுள்ள நிலையில், லக்னோவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளான். ‘எனது விளையாட்டால் நீங்கள்(பெற்றோர்) கவலை அடைந்துள்ளீர்கள். எனது மரணத்திற்கு யாரையும் குறை கூறவில்லை. நீங்கள் ஒருவரையொருவர் கவனித்து கொள்ளுங்கள் என உருக்கமான கடிதம் எழுதிவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளான். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News August 22, 2025
இனி இ-பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்

<<16434322>>இ-பாஸ்போர்ட்<<>> சேவை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இதற்கு முதலில் இ-பாஸ்போர்ட் இணையதளத்தில் அப்பாயின்மென்ட் பெற்று, பின் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு நேரில் சென்று வெரிபிகேஷனை முடிக்க வேண்டும். இது வழக்கமான பாஸ்போர்ட்டின் அப்கிரேட் வெர்ஷன் தான். ஆனால், அதற்கு மாற்று கிடையாது. பயோமெட்ரிக் தகவல்கள் கொண்ட சிப் பொருத்தப்பட்டுள்ளதால் இது பாஸ்போர்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.
News August 22, 2025
துரோகம் செய்த நடிகர்: டைவர்ஸ் கேட்கும் மனைவி

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா- சுனிதா தம்பதியர் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமண பந்தத்தில் 37 ஆண்டுகள் இணைந்திருந்த நிலையில், இளம்நடிகை ஒருவருடன் கோவிந்தா நெருங்கிப் பழகுவதாக தகவல் வெளியானதிலிருந்து கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது. இந்நிலையில், சுனிதா விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. திரைத்துறையில் விவாகரத்து அதிகரிக்க என்ன காரணம்?