News June 25, 2024
மீண்டும் மக்களவை சபாநாயகராகும் ஓம் பிர்லா?

மக்களவை சபாநாயகர் ஒருமித்த கருத்து அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும். இம்முறை துணை சபாநாயகர் பதவி அளிக்கவில்லையேல், வேட்பாளரை நிறுத்துவோம் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லாவையே மீண்டும் தேர்வு செய்ய பாஜக முடிவு செய்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகளுடன் இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் பேச்சு நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Similar News
News September 17, 2025
ரேஷன் பொருள் வாங்க ‘மொபைல் முத்தம்மா’ திட்டம்

ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிட சரியான சில்லறை இல்லாம கஷ்டப்படுறீங்களா? இதற்கு தீர்வு காண ‘மொபைல் முத்தம்மா திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பொருள்கள் வாங்கும் போது ரொக்கமாக செலுத்தாமல், ரேஷன் கடையில் உள்ள QR code-ஐ வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் ஸ்கேன் செய்து பணப் பரிவர்த்தனை செய்யலாம். பணம் அரசின் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுவதால் முறைகேடுகளும் தடுக்கப்படும்.
News September 17, 2025
ஜப்பானில் சிக்கிய போலி பாக்., கால்பந்து அணி

பாக்.,ஐ சேர்ந்த 22 பேர் அடங்கிய போலி கால்பந்து குழு ஜப்பானில் கொத்தாக சிக்கியுள்ளனர். ‘Golden Football Trial’ என்ற டீம் பெயருடன், 22 பேரும் கால்பந்து வீரர்கள் போல் நடித்து போலியாக கொடுத்த ஆவணத்தின் பின்னணியில், இது மோசடியானது என கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாலிக் வகாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாக, பாக்.,ன் FIA விசாரணைக்குழு கூறியுள்ளது.
News September 17, 2025
ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் மனு

தன்னை பற்றி ஜாய் கிரிஸில்டா அவதூறாக பேசிய வீடியோக்களை நீக்க கோரியும், அவதூறு கருத்துகளை கூற தடை விதிக்க வலியுறுத்தியும் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை HC-ல் மனுதாக்கல் செய்துள்ளார். அதேபோல், இவர் பங்குதாரராக இருக்கும் மாதம்பட்டி தங்கவேலு PVT Ltd நிறுவனத்தையும் தொடர்புபடுத்தி ஜாய் பேசியதால், அந்நிறுவனத்திற்கு 15 நாள்களில் ₹12.5 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.