News March 4, 2025
உடல் பருமனால் இத்தனை சிக்கலா?

உடல் பருமன் உலகளவில் பெரும் தலைவலியாக பலருக்கு உள்ளது. ஆய்வின்படி, இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளில் 5ல் ஒன்று இதனால் பாதிக்கப்படுகிறது. அதேபோல், பெரியவர்களில் 3ல் ஒருவருக்கு பாதிப்பு உள்ளது. உடல் பருமனால் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய் உள்ளிட்ட பல பிரச்னைகள் மனிதனுக்கு ஏற்படுகின்றன. தினசரி உடற்பயிற்சி செய்வது, துரித உணவுகளை தவிர்ப்பது இதனை குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது.
Similar News
News March 4, 2025
முதல் விக்கெட் எடுத்த ஷமி!

ஷமி இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்துள்ளார். ஆஸி. ஓப்பனர் கூப்பர் கோனொல்லியின்(0) விக்கெட்டை அவர் வீழ்த்தியுள்ளார். ஆஸி. அணி 3 ஓவர்களில் 4-1 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஹெட் 1 ரன்னுடன் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் வந்துள்ளார்.
News March 4, 2025
பாஜக – அதிமுக கூட்டணியா? பின்னணி என்ன?

நேற்று வேலுமணி மகன் திருமணத்திற்கு சென்ற அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் நெருக்கம் காட்டினர். அதேபோல், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட தலைவர்களும் பாஜக உடன் கூட்டணி வைக்க விரும்பிய போதும், EPS விடாப்பிடியாக இருந்தார். இதற்கிடையில் தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என கூறப்பட்ட நிலையில், கூட்டணி இல்லை என பிகே கூறிவிட்டார். இதனால், மீண்டும் பாஜக உடன் செல்ல இபிஎஸ் திட்டமிட்டுள்ளாரா என கேள்வி எழுந்துள்ளது.
News March 4, 2025
மேட்சுக்கு முன்பே ரோஹித்தின் மோசமான ரெக்கார்ட்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் இன்றும் டாஸில் தோற்று மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். ODIல் தொடர்ந்து 11 டாஸ்களை அவர் இழந்துள்ளார். இதன் மூலம், தொடர்ந்து ODI டாஸில் தோற்ற கேப்டன்கள் பட்டியலில் 2வது இடத்தில் ரோஹித் இருக்கிறார். முதல் இடத்தில் மேற்கு இந்திய தீவுகளின் பிரையன் லாரா(12) இருக்கிறார். அதே நேரத்தில் இந்திய அணி, தொடர்ந்து 14 ODIல் டாஸை தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.