News September 17, 2025
மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவா?

தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக CM, PM-ஆக அரசின் தலைமை பொறுப்பில் இருப்பவர் மோடி. ஆனால், அவரிடம் சொந்தமாக நிலம், வீடு, கார் கூட இல்லை. 2024 தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அவருடைய சொத்து மதிப்பு ₹3.2 கோடி தான். அவர் தன்னுடைய சொத்தில் பெரும்பாலான பணத்தை வங்கியில்தான் டெபாசிட் செய்து வைத்திருக்கிறார். மேலும், அவர் யாருக்கும் கடன் கொடுத்ததும் இல்லை; வாங்கியதும் கிடையாதாம்.
Similar News
News September 17, 2025
அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள்

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா? நாம் யாரும் நினைத்தே பார்க்காத ஒருவர் தான் அதிக சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவர் நயன்தாரா இல்லை. மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. நீங்க யாருன்னு நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 17, 2025
சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை: அன்புமணி

வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு அன்புமணி அஞ்சலி செலுத்தினார். இதன்பின் அவர் பேசுகையில், வன்னியர் இடஒதுக்கீடு பற்றி கவலைப்படாத திமுகவுக்கு, அந்த சமூக மக்களின் வாக்கு மட்டும் வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது என்று சாடிய அவர், 15% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, டிச.17-ல் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றார்.
News September 17, 2025
படி ஏறவே மூச்சுத்திணறும் ‘மின்னல் மேன்’

ஒரு காலத்தில் 100 மீட்டரை 9.58 செகண்டில் ஓடிய உலகின் மின்னல் வேக மனிதன் உசைன் போல்ட், தற்போது மாடிப் படி ஏறவே தான் சிரமப்படுவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 2017-ல் ஓய்வு பெற்றபின், டிவி பார்ப்பது, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது என லைஃப்ஸ்டைல் மாறிவிட்டதால், உடற்பயிற்சி செய்வது குறைந்துவிட்டதாகவும் தெரிவித்த அவர், மீண்டும் ஓட்டப்பயிற்சி செய்ய வேண்டும் என நினைப்பதாகவும் கூறியுள்ளார்.