News January 6, 2025
தமிழகத்தில் மாஸ்க் கட்டாயம்?

சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகாவை போல், தமிழகத்திலும் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கை எடுப்பதன் மூலம் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த வைரஸ் தொற்று குறித்து யாரும் பதற்றமடைய தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 16, 2026
கிருஷ்ணகிரியில் உடல் கருகி பலி!

நாகரசம்பட்டி அருகே உள்ள வீரமலையை சேர்ந்த தம்பதி ஜெயராஜ் – மீனா (28). கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையினால் மனமுடைந்த மீனா கடந்த 25-ந் தேதி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்தார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 16, 2026
ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க விரைந்தார் உதயநிதி!

மதுரை, பாலமேட்டில் இன்னும் சற்றுநேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க உள்ளது. இதனை DCM உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக காலையிலேயே எழுந்து தயாரான அவர், வாடிவாசலுக்கு விரைந்துள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் போட்டியானது தொடங்க உள்ளது. இன்று 1,000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் வாடிவாசலில் களம் காண காத்திருக்கின்றனர். சிறந்த காளைக்கு டிராக்டர், சிறந்த வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.
News January 16, 2026
BREAKING: முதல்வர் ஸ்டாலினின் 4 புதிய வாக்குறுதிகள்

திருவள்ளுவர் தினமான இன்று, தமிழக மக்களுக்கு 4 புதிய வாக்குறுதிகளை அளிப்பதாக CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். *சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல். *வறியோர் எளியோர் வாழ்வுயுர மனிதநேயத் திட்டங்கள். *இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள். *தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.


