News May 12, 2024

கெஜ்ரிவால் INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா?

image

INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் நீங்கள் இருக்கிறீர்களா? என்று அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நிச்சயமாக அந்தப் போட்டியில் நான் இல்லை. மத்தியில் INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் தார்மீக பொறுப்பை மட்டுமே ஏற்பேன் என்று பதிலளித்துள்ளார்.

Similar News

News February 10, 2026

ஆன்லைன் டிக்கெட்கள்.. ரயில்வேயின் அதிரடி மாற்றம்!

image

வரும் 1-ம் தேதி முதல் UTS செயலி வேலை செய்யாது என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட், Unreserved டிக்கெட் போன்றவற்றை இனி Railone செயலியில் மட்டுமே பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளது. Railone செயலி மூலம், மேற்கூறிய டிக்கெட்கள் மட்டுமின்றி முன்பதிவு டிக்கெட்கள் உள்பட அனைத்து ரெயில்வே சேவைகளையும் பெறலாம். இச்செய்தியை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 10, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹560 குறைந்தது

image

இந்த வார தொடக்கமான நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 1 கிராம் தங்கம் ₹70 குறைந்து ₹14,580-க்கும், 1 சவரன் ₹560 குறைந்து ₹1,16,640-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் வெள்ளி ₹300-க்கும், 1 கிலோ வெள்ளி ₹3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

News February 10, 2026

காலியாகும் கூடாரம்.. என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்?

image

அதிமுகவை மீட்டே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் ஓபிஎஸ், தனித்து விடப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். காரணம், தெளிவற்ற முடிவு, வலிமையான நிலைப்பாட்டில் இல்லாததுதான் எனவும் தெரிவிக்கின்றனர். இதனாலேயே அவரது கூடாரத்தில் இருந்தவர்கள் மாற்றுக்கட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். ஆனாலும், தை முடிய நாள்கள் உள்ளது என்கிறார் ஓபிஎஸ். உறுதியான முடிவை எடுப்பாரா?

error: Content is protected !!