News May 7, 2024

திரைத்துறையை விட்டு விலகும் கங்கனா?

image

இமாச்சலின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, திரைத்துறையை விட்டு விலகுவீர்களா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தன்னிடம் பல படங்கள் கைவசம் இருப்பதாகவும், தற்போதைக்கு திரையுலகை விட்டு விலக முடியாது எனவும் தெரிவித்தார். மண்டி தொகுதியில் வெற்றி பெற காங்., தீவிரமாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 23, 2025

தமிழகத்தில் தாமரை மலர்வதை விஜய் பார்ப்பார்: தமிழிசை

image

மாநாட்டில் ஒரு கொடிக்கம்பத்தை கூட ஒழுங்காக நட முடியாதவர்கள் எப்படி ஆட்சி நடத்துவார்கள் என விஜய்யை தமிழிசை விமர்சித்துள்ளார். விஜய் அரசியலில் புதியவர், அவர் வரவெல்லாம் பாஜகவை ஒன்றும் செய்யாது என கூறினார். தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாவிட்டாலும் தமிழகத்தில் தாமரை எல்லோரும் ஆச்சரியப்படும் அளவுக்கு மலரப்போகிறது, அதை தம்பி விஜய் பார்க்கத்தான் போகிறார் என்றும் தெரிவித்தார்.

News August 23, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 23 – ஆவணி 7 ▶ கிழமை: சனிக்கிழமை ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM, 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: பிரதமை ▶ சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.

News August 23, 2025

அமெரிக்காவுக்கு குட் பை… ஏஞ்செலினா முடிவு!

image

ஒரு காலத்தில் மக்களின் கனவுத் தேசமாக இருந்தது அமெரிக்கா. அந்த நாட்டில் குடியேறவே அனைவரும் விரும்பினர். ஆனால், காலம் மாறிவிட்டது. இப்போது அமெரிக்காவில் இருந்து வெளியேறவே பலரும் விரும்புகின்றனர். ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், ஏஞ்செலினா ஜோலியும் வெளியேறப் போவதாக கூறப்படுகிறது. அரசியல் நிலையின்மை, அதிகரிக்கும் குற்றங்கள், நிதிச்சுமை போன்றவை இதற்கு காரணங்களாகும்.

error: Content is protected !!