News October 15, 2025
அறிவாலயத்தின் அரசியல் பிராப்பர்ட்டியா கமல்ஹாசன்?

அரசியலில் பெரிய அனுபவம் இல்லை என்றாலும், கூர்மையான அறிவாற்றல் கொண்டவர் கமல்ஹாசன். அவரை திமுக பயன்படுத்துகிறது என சொல்வது கொச்சைப்படுத்தும் செயல் என ஆ.ராசா பதிலளித்துள்ளார். தற்போதைய அவரது நடவடிக்கைகளை பார்த்துவிட்டு அதன் பின்னணியில் திமுக இருக்கிறதென சிலர் சொல்கிறார்கள். இது தவறு என கூறிய அவர், நடிகராக இருந்தபோது கொண்டிருந்த கொள்கைகளை பொதுவாழ்க்கைக்கு வந்தபின் மாற்றியிருப்பார் என கூறியுள்ளார்.
Similar News
News October 15, 2025
எதிர்க்கட்சியினர் பேசும் போது கட் செய்யலாமா?

2021 வரை சட்டமன்ற நிகழ்வுகள் ஷூட்&எடிட் செய்யப்பட்டுதான் மக்கள் பார்வைக்கு வரும். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது திமுக. சொன்னபடியே நேரலையும் செய்தது. ஆனால், எதிர்கட்சியினர் பேசும்போது மட்டும், நேரலை துண்டிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜனநாயகத்தை தூக்கிப்பிடிக்கும் திமுக, கருத்துரிமையை பறிக்கலாமா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
News October 15, 2025
உடலை சிக்கென ஸ்லிம்மாக காட்டும் ‘5’ ஃபேஷன் ட்ரிக்ஸ்!

ஆபிஸோ, பார்ட்டியோ எங்கு போனாலும் ‘First Impression’ தான் முக்கியம். அது நமது டிரெஸ்ஸிங் ஸ்டைலிலேயே தெரிந்துவிடும். உடலை சிக்கென ஒல்லியாக காட்ட, உங்களின் டிரெஸிங் சென்ஸை கொஞ்சம் மாற்றினாலே போதும். கொஞ்சம் வெயிட் போட்டாலும், ‘அய்யயோ.. இனி ஸ்டைலா டிரஸ் பண்ண முடியாது’ என புலம்புறவங்களுக்கு டாப் 5 ட்ரிக்ஸை பட்டியலிட்டுள்ளோம். இத நீங்களும் ஃபாலோ பண்ணுங்க.. ஸ்டைலா இருங்க!
News October 15, 2025
BREAKING: பேய் மழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் இன்று முதல் தீபாவளி (அக்.20) வரை கனமழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் மிக கனமழையும், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கலில் கனமழையும் பெய்யக்கூடும். அதேபோல் நாளை சென்னை, காஞ்சி உள்ளிட்ட 30 மாவட்டங்களுக்கு கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.