News November 20, 2024
செல்வாக்கு இழக்கிறதா JMM?
ஜார்கண்ட் தனி மாநிலமாக உதயமானது முதல் அந்த மாநில அரசியலில் தனி செல்வாக்குடன் JMM திகழ்கிறது. கடந்த 2019 தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற JMM, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைத்தது. ஆனால் இந்த முறை நடந்தத் தேர்தலில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கு ஆதரவாக உள்ளன. இதனால் ஜார்கண்டில் JMM தனது செல்வாக்கை இழக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News November 20, 2024
எடப்பாடி பழனிசாமியா? எரிச்சல்சாமியா? மா.சு
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதையும் அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிடுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்காதீர்கள் என்று கூறிய அவர், எடப்பாடி பழனிசாமியா, எரிச்சல்சாமியா என்ற அளவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மீது அவதூறு பரப்பி வருவதாக சாடியுள்ளார்.
News November 20, 2024
தனுஷை புறக்கணித்த நயன்தாரா
தனது ஆவணப்படம் ஓடிடியில் வெளியான நிலையில், அதில் படக் காட்சிகளை சேர்க்க ஒப்புதல் அளித்த பட தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து நயன்தாரா 3 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ், தெலுங்கு, மலையாள தயாரிப்பாளர்கள் பெயர்களை வரிசையாக பட்டியலிட்டுள்ளார். “நானும் ரவுடிதான்” பட காட்சியை சேர்க்க ஒப்புதல் தராத அப்படத் தயாரிப்பாளரான தனுஷ் பெயரை மட்டும் குறிப்பிடாமல் அதிர்ச்சி அளித்துள்ளார்.
News November 20, 2024
மக்கள் வாழ இதுதான் வழி: சீமான்
திமுக ஆட்சியை அகற்றுவதே, மக்கள் பாதுகாப்பாக வாழ ஒரே வழி என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். தஞ்சை, ஓசூர் சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அரசு ஊழியர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும் எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.