News July 4, 2025
கேப்டன் ஆசையில் உள்ளாரா ஜடேஜா?

கோலி, ரோகித், அஸ்வின் போன்ற வீரர்கள் ஓய்வுப் பெற்றுவிட்டனர். இருப்பினும் பும்ரா, கில் போன்ற வீரர்களையே கேப்டானாக பார்த்த தேர்வாளர்கள், ரவீந்திரா ஜடேஜாவை பார்க்க தவறிவிட்டனர். தற்போதுள்ள அணியில் மூத்த வீரர் என்றால் அது ஜடேஜா தான். கேப்டனாக வேண்டும் என ஆசை உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘அந்த கப்பல் கரையை கடந்துவிட்டது’, அதாவது அதற்கான நேரம் முடிந்துவிட்டது என நாசூக்காக சொன்னார் ஜடேஜா.
Similar News
News July 5, 2025
‘ஒன்றல்ல, 3 எதிரிகளை எதிர்கொண்டோம்’

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனா, பாகிஸ்தான், துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக ராணுவ துணை தளபதி ராகுல் ஆர் சிங் தெரிவித்தார். துருக்கி பாகிஸ்தானுக்கு ஏராளமான ட்ரோன்களை வழங்கியது என்றும், பாக்., ராணுவ தளவாடங்களில் 81% சீனா ஹார்டுவேர்களே உள்ளதாகவும் கூறினார். மேலும் பாக்., உடனான மோதலின் போது, நமது ராணுவ நகர்வுகளை நிகழ்நேரத்தில் சீனா மூலம் பாக்., பெற்றதாக தெரிவித்தார்.
News July 5, 2025
நீங்க இப்படியா தூங்குறீங்க… இத பாருங்க

போரடித்தால் குப்புறப்படுத்து கிடப்பது (அ) அப்படியே தூங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. இது நல்லதல்ல என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். ஆம், நீண்டநேரம் குப்புறப்படுத்துக் கிடந்தால் முதுகு, கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் வலி ஏற்படுமாம். முகத்தில் சுருக்கங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டாம். குறிப்பாக கர்ப்பிணிகள் இப்படி தூங்கக் கூடாதாம். மல்லாந்து படுத்துத் தூங்குவது தான் சிறந்ததாம்.
News July 5, 2025
ராசி பலன்கள் (05.07.2025)

➤ மேஷம் – சுகம் ➤ ரிஷபம் – மகிழ்ச்சி ➤ மிதுனம் – லாபம் ➤ கடகம் – அமைதி ➤ சிம்மம் – புகழ் ➤ கன்னி – நட்பு ➤ துலாம் – வெற்றி ➤ விருச்சிகம் – உற்சாகம் ➤ தனுசு – சுபம் ➤ மகரம் – நிறைவு ➤ கும்பம் – கவனம் ➤ மீனம் – நன்மை.