News May 15, 2024

சர்ச்சைக்கு விளக்கம் கொடுக்க இவ்வளவு தாமதமா?

image

மோடியின் அரசியல் பயணம் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலை அடிப்படையாக கொண்டது என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார். ஊடுருவல்காரர்கள் என முஸ்லிம்களை கூறவில்லை என பிரதமர் கூறியிருந்த நிலையில், இந்த விளக்கத்தைக் கொடுக்க இவ்வளவு தாமதமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் மோடியும், பாஜகவும் எண்ணற்ற பொய்களை பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 22, 2026

Revenge: திமுகவை கண்டுகொள்ளாத காங்கிரஸ்

image

தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தாமல் எப்படி காங்கிரஸை திமுக இழுத்தடித்ததோ, அதே பாணியில் தற்போது புதுச்சேரியில் திமுகவை காங்கிரஸ் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. நேற்று முதல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஜெகத்ரட்சகன் காத்திருந்த நிலையில், காங்கிரஸ் தரப்பில் கண்டுகொள்ளவில்லையாம். இதனால், அதிருப்தியடைந்த திமுகவினர், காங்கிரசாரின் செயல்பாடு குறித்து தலைமையிடம் முறையிட சென்னை கிளம்பியுள்ளனராம்.

News March 22, 2026

செல்போன் எண்ணுக்கு மெசேஜ் வந்தது! உடனே செக் பண்ணுங்க

image

தனது வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணிற்கு திடீரென்று அதிர்ச்சியளிக்கும் குறுஞ்செய்தியை இந்தியன் வங்கி அனுப்பியுள்ளது. அதில், மாதம் 5 முறை மட்டுமே ATM பண பரிவர்த்தனையை கட்டணம் இல்லாமல் மேற்கொள்ளலாம். அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ₹17 கட்டணம் வசூலிக்கப்படும் என இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை ஏப்.20 முதல் அமலுக்கு வருகிறது.

News March 22, 2026

இந்துக்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி தீர்மானம்

image

1971, மார்ச் 25-ல் பாக்., ராணுவம், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் இணைந்து வங்காள இந்துக்களுக்கு எதிராக நடத்திய அட்டூழியங்களை ‘போர்க்குற்றங்கள் & இனப்படுகொலை’ என வரையறுக்கக் கோரி US பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. சபை உறுப்பினர் லேண்ட்ஸ்மேன் முன்மொழிந்த இதில், ‘Operation Searchlight’ என்ற பெயரில் கிழக்கு பாக்., முழுவதும் இக்கொடூரம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!