News September 13, 2025
டிவி பார்க்கும் போது சாப்பிட்டா இவ்வளவு பிரச்னையா!

★டிவியை பார்க்கும் போது கூடுதலாக சாப்பிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ★அவ்வாறு சாப்பிடும்போது ‘போதும்’ என்று மூளை சமிக்ஞை செய்யும். ★ஆனால், கவனம் முழுவதும் டிவி திரையில் இருப்பதால் மூளையின் சமிக்ஞையை உணர முடியாமல் போகும். ★இதனால் விரைவாக சாப்பிட நேரிடும். ★இதன் காரணமாக வயிற்று உப்புசம், அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
Similar News
News September 13, 2025
செப்டம்பர் 13: வரலாற்றில் இன்று

*1948 – ஐதராபாத்தை இந்திய ஒன்றியத்தில் இணைக்க துணை பிரதமர் வல்லபாய் பட்டேல் ராணுவத்துக்கு உத்தரவிட்டார். *1960 – நடிகர் கார்த்திக் பிறந்தநாள். *2008 – டெல்லியில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 30 பேர் உயிரிழப்பு.
News September 13, 2025
BCCI-க்கு வலுக்கும் கண்டனம்

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்ட வடு இன்னும் மறையாத நிலையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது அவசியமா என்றும் பணம் சம்பாதிப்பது மட்டுமே உங்கள் நோக்கமா எனவும் BCCI-க்கு SM-ல் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே, மத்திய அரசு அனுமதித்ததால் பாக். உடன் விளையாடுவதாக BCCI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

*உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன்; வாழ்த்துகுரியவன் ; அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுத்துவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையேறச் செய்வதாகும். *விதியை நம்பி, மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிக கேடு. *சமத்துவம், சமதர்மம் போன்ற லட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். *கண்டனத்தை தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.