News August 12, 2025

இப்படி செய்வது தொழில் தர்மமா.. நீங்க சொல்லுங்க!

image

HR ஒருவரின் போஸ்ட் நெட்டிசன்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த பதிவில், தங்கள் ஆபிஸில் வேலை செய்யும் Employee ஒருவர், தனது முதல் சம்பளம் வந்த 5 நிமிடங்களிலேயே வேலையை ராஜினாமா செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஒருவரை பல கட்ட Interview-களுக்கு பிறகு, தேர்வு செய்து வேலை கொடுத்தால், இப்படி செய்வது தொழில் தர்மமா? எனவும் அவர் கேட்கிறார். நீங்க என்ன நினைக்கிறீங்க.. கமெண்ட் பண்ணுங்க?

Similar News

News August 12, 2025

யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குழு

image

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்படுவதாக லோக்சபா தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். 146 MP-க்கள் கையெழுட்திட்டு வழங்கிய தீர்மானத்தின் அடிப்படையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமாம். தீ விபத்தின் போது வர்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது.

News August 12, 2025

நாட்டில் இவ்வளவு ₹500 கள்ள நோட்டுகளா?

image

2024 – 25 நிதியாண்டில் 2.17 லட்சம் என்ற எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், ₹500 கள்ள நோட்டுகள் 1.17 லட்சம், 200 கள்ள நோட்டுகள் ₹32 ஆயிரம், 100 நோட்டுகள் ₹51 ஆயிரம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளின் தரத்தை மேம்படுத்த RBI-க்கு வலியுறுத்தி இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளியே இன்னும் எவ்வளவு இருக்குதோ?

News August 12, 2025

பரலோகத்தில் உள்ள பெண்ணுக்கு வாக்குரிமையா?

image

‘பரலோகத்தில் இருப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கிய தேர்தல் ஆணையமே பார்லிமென்ட்டில் எங்களுக்கு பதில் சொல்’ என ECI-க்கு MP சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 124 வயதான மின்தா தேவி எப்படி பிஹாரின் சிவான் தொகுதிக்கான SIR பட்டியலில் உள்ளார் எனவும் இது வெறும் எழுத்தர் பிழை அல்ல; மெகா மோசடிக்கான சான்று என்றும் சாடியுள்ளார். மின்தா தேவியின் போட்டோவுடன் MP மாணிக்கம் தாகூர் அவைக்கு சென்றுள்ளார்.

error: Content is protected !!