News March 28, 2025

விரல்ரேகை வைத்தால் தான் GAS சிலிண்டரா? புது அப்டேட்

image

சமையல் GAS சிலிண்டர் வாடிக்கையாளர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்யவில்லை எனில் சிலிண்டர் கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. மானிய விலை சிலிண்டர் பெறும் பயனாளிகளின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணிகள் நடக்கிறது. இதற்கு சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் GAS ஏஜென்சிக்கு சென்று, விரல் ரேகை பதிய வேண்டும். இப்பணியை, வரும் 31ம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News October 15, 2025

மீண்டும் ‘அருணாச்சலம்’ காம்போ?

image

ஆக்‌ஷன் படங்களிலேயே தொடர்ந்து நடிக்கும் ரஜினி, விரைவில் காமெடியிலும் அசத்துவார் போலும்! ‘ஜெயிலர் 2’ படத்திற்கு பிறகு, ரஜினிகாந்தை சுந்தர்.சி இயக்குவார் என்ற தகவல் கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. கமலுடன் இணைவதற்கு முன், இந்த படம் உருவாக இருக்கிறதாம். ஏற்கெனவே, இவர்களின் காம்போவில் வெளியான ‘அருணாச்சலம்’ படம் மாபெரும் வெற்றி அடைந்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த காம்போ வெல்லுமா?

News October 15, 2025

பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்படுவது எப்படி?

image

சாதாரண பட்டாசுகளோடு ஒப்பிடும்போது, பசுமை பட்டாசுகள் குறைந்த மாசுபாட்டை உண்டாகும் மூலப்பொருட்களை வைத்தே தயாரிக்கப்படுகிறது. சாதாரண பட்டாசுகளில் ஆர்செனிக், லித்தியம், பேரியத்தின் அளவு அதிகமாக இருப்பதால் புகையும் அதிகமாக வெளியாகும். ஆனால், பசுமை பட்டாசுகளில் அலுமினியம், லெட், கார்பன் ஆகிய மூல பொருட்கள் குறைந்த அளவில் சேர்க்கப்படுகிறது. எனவே புகையும் குறைவாக இருக்கும்.

News October 15, 2025

தீபாவளி ஆஃபர்.. ₹17,000 வரை விலை குறைந்தது

image

Triumph நிறுவனம் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 பைக்குகளுக்கு ₹16,797 வரை தீபாவளி Offer அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்பீடு 400 ஷோரூம் விலை சுமார் ₹2,33,754 எனவும், ஸ்பீடு T4 ₹1,95,539 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 350 CC-க்கு மேற்பட்ட பைக்குகளுக்கு GST 40% ஆக உயர்த்தப்பட்ட போதிலும் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக <<17985075>>ஹூண்டாய், டாடா<<>> நிறுவனங்கள் தங்களின் கார்களின் விலையை குறைத்திருந்தன.

error: Content is protected !!