News June 28, 2024
விவாகரத்து பெற்றிருந்தால் மட்டுமே வழங்க முடியும்?

விவாகரத்து பெறாமல், பிரிந்து வாழும் கணவர்களுக்கு தனித்தனி ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் என சிவகாசி எம்.எல்.ஏ., அசோகன் கோரிக்கை விடுத்திருந்தார். உணவுத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கணவரிடம் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்றிருந்தால் எப்படி தரமுடியும்? விவாகரத்து பெற்றிருந்தால் மட்டுமே வழங்க முடியும் எனப் பதிலளித்தார்.
Similar News
News December 25, 2025
காஞ்சி: மூதாட்டியை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்!

உத்திரமேரூர் அடுத்த கோழியாளம் கிராமத்தில் வசிப்பவர் அசோக்(20). இவர், 65 வயது மூதாட்டியின் விவசாய நிலத்தில் நெல் மூட்டைகளை அடுக்குவதற்காக சென்றார். அப்போது அந்த மூதாட்டியிடம் ’உல்லாசமாக இருக்கலாம்..’ என அழைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மூதாட்டி அளித்த புகாரின் பேரில் உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.
News December 25, 2025
விஜய்யை எதிர்க்க உதயநிதியின் பிளான் இதுவா?

விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு தேர்தலில் இளைஞர்களை களமிறக்கும் கட்டாயம் திமுகவுக்கும் வந்துள்ளது. இதனால் இளைஞரணியில் ஆக்டிவாக இருக்கும் 40 பேரை தேர்வு செய்த உதயநிதி, அவர்களை அழைத்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டாராம். மீட்டிங் முடிந்தவுடன், அவர்களுக்கு தடபுடலாக விருந்து வைத்து தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றிய OFFICIAL தகவல் விரைவில் வெளியாகலாம்.
News December 25, 2025
வசீகரமான மார்கழி கோலங்கள்!

மார்கழி அதிகாலையில் வீட்டுவாசலில் கோலமிடுவதால், தேவர்கள் மற்றும் ரிஷிகளிடமிருந்து நமக்கு நல்ல ஆற்றலும், ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அத்துடன் தீய சக்திகள் வீட்டினுள் நுழைவது தடுக்கப்படும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், வாசலை அலங்கரிக்கும் சில ஸ்பெஷலான மார்கழி கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை Swipe செய்து பார்த்து, வீட்டு வாசலில் முயற்சிக்கவும்.


