News March 24, 2025
வியர்க்குருவுக்கு ‘பவுடர்’ யூஸ் பண்றது சரியா?

சம்மர் சீசனில், வியர்க்குரு வாட்டி வதைத்து விடும். இந்த வியர்க்குருவை சமாளிக்க, பிரத்யேக பவுடர்களை பலர் பயன்படுத்துவார்கள். அந்த பவுடர்களில் Arrow root starch, Corn starch, Menthol, Zinc oxide போன்றவை இருக்க வேண்டும். அப்போது தான், அவை பயன்படுத்தும் போது, சற்று இதமாக உணர முடியும். இருப்பினும், இதனை அளவுக்கு அதிகமாக யூஸ் செய்தால், அது சருமத்தில் பிரச்னைகளை உண்டாக்கலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.
Similar News
News December 7, 2025
தருமபுரியில் முதல் முறையாக செஸ் போட்டி!

தருமபுரி மாவட்டத்தில் முதல்முறையாக, நேற்று (டிச.06) விவேகானந்த செஸ் அகாடமி சார்பில் சர்வதேச அளவிலான செஸ் போட்டி நடைபெறுகிறது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பின், பல்வேறு நாடுகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 18மாநிலங்களில் இருந்து மொத்தம் 412 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
News December 7, 2025
பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்

ஏர்டெல்லின் குறைந்த விலை ₹181 Data பிளான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ₹195 பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ₹195-ல் 12GB Data + JioHotstar உள்பட 20 OTT-க்கான 1 மாத Subscription கிடைக்கும். முன்னதாக, ₹181 ரீசார்ஜ் பிளானில் 30 நாளுக்கான 15GB Data வழங்கியதோடு 20 OTT Subscription-ஐ ஏர்டெல் இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
News December 7, 2025
வங்கிகளில் ₹78,000 கோடி உரிமை கோரப்படவில்லை: PM

நாட்டின் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் ₹78,000 கோடி உள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பணம் என்று குறிப்பிட்ட அவர், அப்பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க அரசு முயற்சி எடுத்து வருவதாக கூறியுள்ளார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் பேசியுள்ளார்.


