News September 27, 2025
உடற்பயிற்சிக்கு பின் வெந்நீரில் குளித்தால் சிக்கலா?

உடற்பயிற்சிக்கு பிறகு சூடான நீரில் குளித்தால் உடலில் கூடுதல் அழுத்தம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்யும்போது உடலானது சூடாகவும், இதயத்துடிப்பு அதிகமாகவும் இருக்கும். மேலும் இரத்த நாளங்களானது உடலை குளிர்விக்க அகலமாக விரிவடையும். இத்தகைய சூழ்நிலையில், சூடான நீரில் குளித்தால் உடலானது மேலும் சூடாகும். இதன் விளைவாக லேசான தலைச் சுற்றல் அல்லது மயக்கம் கூட வரலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
Similar News
News January 8, 2026
முன்னாள் அமைச்சர் கபீந்திர புர்கயஸ்தா காலமானார்

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், EX மத்திய அமைச்சருமான கபீந்திர புர்கயஸ்தா(94) உடல் நலக்குறைவால் காலமானார். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர், 1998-ல் வாஜ்பாயின் அமைச்சரவையில் IT துறை அமைச்சராக இருந்தார். நல்லதொரு சமூக சேவகரை இழந்துவிட்டோம் என கபீந்திர புர்கயஸ்தா மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News January 8, 2026
அவர் வக்கீல் தானே பண்ணட்டும்: KN நேரு

ED ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் KN நேருவுக்கு எதிராக ₹1,020 கோடி ஊழல் புகாரை அதிமுக சுமத்தியுள்ளது. மேலும் அவர் மீது FIR பதிவு செய்யக் கோரி சென்னை HC-ல் MP இன்பதுரை மனுத்தாக்கல் செய்துள்ளதும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் வக்கீல் தானே, அவர் கோர்ட்டுல பதிவு பண்ணட்டும் என்று அமைச்சர் நேரு அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
News January 8, 2026
ஏன் ரஜினி 50 நடக்கவில்லை?

நேற்று ‘பாக்யராஜ் 50’ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தவறில்லை, பாராட்டுக்குரியதே. கமலின் 60-ம் ஆண்டை, சத்யராஜ் 25-ம் ஆண்டுகளை கொண்டாடிய இந்த கோலிவுட், இன்னும் ஏனோ ரஜினி 50-ஐ கவனிக்கவில்லை என ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர். ரஜினியை அணுகிய போது, அவர் மறுத்துவிட்டதாக கூறப்பட்டாலும், ஏன் கோலிவுட் அவரை Convince செய்ய முயலவில்லை என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.


