News December 17, 2024
ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா?

பிரபாஸ் நடிக்கும் படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு நயன்தாரா நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘த ராஜா சாப்’ என்ற படத்தில் அவர் தற்போது நடித்து வருகிறார். ஹாரர் காமெடி கதைக்களத்தில், இந்த படம் உருவாகிவரும் நிலையில், பிரபாஸுக்கு ஜோடியாக ஒரு பாடலில் நயன்தாரா நடனமாட உள்ளதாக தெரிகிறது. நயன்தாரா சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் ஹைதராபாத்தில் எடுக்கவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
Similar News
News September 16, 2025
Sports Roundup: WAC-ல் ஏமாற்றிய இந்திய வீரர்கள்

* இந்தியா A – ஆஸி. A இடையிலான 4 நாள் டெஸ்ட் லக்னோவில் இன்று தொடங்குகிறது. * உலக தடகள சாம்பியன்ஷிப், நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் 25வது இடம் பிடித்து ஏமாற்றம். * உலக தடகள சாம்பியன்ஷிப், 110மீ தடை ஓட்டத்தில் 0.06 விநாடிகளில் அரையிறுதி வாய்ப்பை தேஜஸ் ஷிர்ஸ் தவறவிட்டார். *புரோ கபடி லீக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் 40-37 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது.
News September 16, 2025
காலையில் கடுகு காபி குடிங்க.. அவ்வளோ நல்லது!

கடுகு காபி செரிமானத்தையும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் *கடுகு எடுத்து மிதமான தீயில், நன்கு வெடித்து வாசம் வரை வறுக்கவும் *அதை மிக்ஸியில் போட்டு, காபி பொடியை போல நன்றாக அரைத்துக் கொள்ளவும் *இந்த கடுகு பொடியை, கொதிக்க வைத்த நீரில் சேர்க்கவும். மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும் *அதில் வெல்லம் சேர்த்தால், கடுகு காபி ரெடி. SHARE.
News September 16, 2025
திமுகவில் இணைந்த தவெகவினர்

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தவெகவை சேர்ந்த பலர் திமுகவில் இணைந்துள்ளதாக திமுக MLA நந்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ நிர்ணயித்த இலக்கை விட 58 ஆயிரம் உறுப்பினர்களை அதிகமாக திமுகவில் இணைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.