News August 18, 2024
கட்சியினரை தூண்டிவிடுவது தான் என் வேலையா?

தன்னை பற்றி அவதூறாக பேச நாதக கட்சியினரை சீமான் தூண்டிவிடுவதாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் புகார் அளித்தார். இதன்பேரில் சீமான் மீது வழக்கு பதிவாகியுள்ளது. இதுகுறித்து பேசிய சீமான்,”கட்சியினரை தூண்டுவதுதான் என் வேலையா? என் பிள்ளைகள் இப்படி செய்ய மாட்டார்கள். முன்பு தேவையற்ற கருத்துகளை பேசியதற்காக தளபதி சாட்டை துரைமுருகனையே நீக்கியிருக்கிறேன்” எனக் கூறினார்.
Similar News
News December 7, 2025
நெப்போலியன் பொன்மொழிகள்!

*முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று *சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் செயலுக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள் *சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி, தைரியம் என்பது இரண்டாம் தகுதியே *வாய்ப்புகளே இல்லாதபோது திறமையால் ஒன்றும் பயனில்லை *வெற்றி கிடைக்குமா என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியே கொண்டுசெல்லும்
News December 7, 2025
திருமணம் எப்போது? மனம் திறந்த சிம்பு

திருமண விஷயத்தில், ரொம்பவும் அடிவாங்கிவிட்டதாக சிம்பு கூறியுள்ளார். எப்போது திருமணம் செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் நாம் தனியாக இருக்கிறோமா அல்லது யாருடனாவது இருக்கிறோமா. அது முக்கியமல்ல என்றும் ஒழுக்கமாகவும், சந்தோஷமாகவும் வாழ்கிறோமா என்பதே முக்கியம் எனவும் சிம்பு தெரிவித்துள்ளார். மேலும், தன் வாழ்க்கையில் அது நடக்கும்போது (திருமணம்) தானாக நடக்கும் என்று அவர் பேசியுள்ளார்.
News December 7, 2025
இந்தியாவுக்கு எதிராக ரெக்கார்டு படைத்த டி காக்

இந்தியாவுக்கு எதிரான 3-வது ODI-ல் சதம் அடித்து, ஒரு அணிக்கு எதிராக அதிக சதமடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை குயின்டன் டி காக் படைத்துள்ளார். அவர் IND-வுக்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளார். கில்கிறிஸ்ட் Vs SL மற்றும் சங்கக்காரா Vs IND, தலா 6 சதங்கள் விளாசியிருந்தனர். மேலும், ODI-ல் அதிக சதம் அடித்த WK பட்டியலில் சங்கக்காராவுடன் முதலிடத்தை அவர் பகிர்ந்துள்ளார். இருவரும் தலா 23 சதமடித்துள்ளனர்.


