News March 25, 2025

காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது நல்லதா?

image

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. இந்த பழக்கம் நமது உடல் நலனை கடுமையாகப் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். காபியில் உள்ள கஃபைன் கார்டிசோலின் அளவு மற்றும் சில ஹார்மோன்களின் அளவையும் அதிகரித்து உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துமாம். எனவே, காபிக்கு பதிலாக மோர் போன்ற நீராகாரங்களை அருந்தலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.

Similar News

News March 29, 2025

சனிப்பெயர்ச்சி.. மக்களால் திணறும் திருநள்ளாறு

image

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இன்று சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இதனால், திருநள்ளாறு கோயிலில் கடல்போல் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து, வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்யும் பக்தர்கள், நள தீர்த்தத்தில் புனித நீராடி எள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால், கஷ்டங்கள் நீங்கி செல்வம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

News March 29, 2025

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை

image

நீட் தேர்வு அச்சத்தால், மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த தர்ஷினி 4/5/2025இல் நடக்கவுள்ள தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். அனிதா முதல் தர்ஷினி வரை பல உயிர்கள் பறிபோயிவிட்டன. ஆனால், இதற்கு தீர்வுதான் இதுவரை கிடைக்கவில்லை.

News March 29, 2025

திடீரென தெருவில் நாய்கள் துரத்தினால்… இத பண்ணுங்க

image

வர வர நாய்கள் எப்போது தாக்க வருகிறது என்பதே தெரியாமல் போய்விட்டது. திடீரென கடிக்க பாய்கின்றன. அப்படி ஒரு சூழலை நீங்கள் எதிர்கொண்டால், இந்த ட்ரிக்ஸை பயன்படுத்தி எஸ்கேப் ஆகுங்க * நாயை திசைதிருப்ப எதையாவது தூக்கி எறியுங்க *நாய்களின் கண்களை நேரடியாக பார்ப்பதைத் தவிர்க்கவும் *மெதுவாக நடக்கும்போது நாய் உங்களை நோக்கி வந்தால் அப்படியே நின்றுவிடுங்கள் *பதறாமல், சைலெண்டாக இருங்க. ட்ரை பண்ணி பாருங்க…

error: Content is protected !!