News April 26, 2025

சிந்து நதி நீரை தடுப்பது நியாயமா? சீமான் கேள்வி

image

பயங்கரவாதச் செயலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருக்குமேயானால் அவர்களுடன் நேரடியாக மோத வேண்டும், அவற்றை விடுத்து 30 கோடி பாக். மக்களின் குடிநீர், பாசன வசதிகளுக்காக உள்ள சிந்து நதி நீரைத் தடுப்பது எவ்வகையில் நியாயமாகும்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகளுக்கும், பாஜக அரசின் இந்த செயலுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Similar News

News April 27, 2025

அவர் என்னை ஏமாற்றுகிறார்: டிரம்ப்

image

போப் பிரான்சிஸ் இறுதி சடங்கின் போது அமெரிக்க அதிபர் டிரம்பும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சந்தித்தனர். பின்னர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பதிவில், ரஷ்ய அதிபர் புடினுக்கு போரை நிறுத்த மனமில்லை என சாடியுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக புடின் தன்னை ஏமாற்றி வருவதாகவும், எந்த காரணமும் இல்லாமல் உக்ரேனிய பொது இடங்களில் குண்டு வீசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News April 27, 2025

பாக். PM-க்கு முக்கியத்துவம் தர தேவையில்லை: உமர்

image

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயார் என்ற பாகிஸ்தான் பிரதமரின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் தர தேவையில்லை என J&K முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தியாதான் இத்தாக்குதலை நடத்தியதாக கூறியவர்கள் அவர்கள் எனவும், தற்போது சுற்றுலா பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறினால், அது நமது எதிரிகளுக்கு வெற்றியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

News April 27, 2025

தோனியிடம் அடிக்கடி பேசும் ரிங்கு.. ஏன் தெரியுமா?

image

ஃபினிஷிங் ரோலில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து தோனியிடம் அடிக்கடி பேசுவதாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். நிதானமாக இருந்து, போட்டியின் சூழலுக்கு ஏற்ப விளையாட தோனி அறிவுறுத்துவார் எனவும், நிதானமாக விளையாடினாலே எல்லாம் இயற்கையாக சரியாகிவிடும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஐபிஎல்லில் 14 போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதால் ஃபிட்னஸில் அதிகம் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!