News March 17, 2025

உரிமைகளை தடுப்பது நியாயமா? – பொங்கிய சரத்!

image

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அண்ணாமலை, தமிழிசை, H.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு, பாஜகவின் சரத் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான போராட்ட உரிமைகளை தடுப்பது நியாயமா? என X தளத்தில் கேள்வி எழுப்பி CM ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.

Similar News

News March 17, 2025

வங்கி சேவைகள் 4 நாள்கள் முடங்கும் அபாயம்!

image

வாரத்தில் 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கு முந்தைய 2 நாள்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமையாக உள்ளன. இதனால், 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்க வாய்ப்புள்ளது. அதனால், பொதுமக்கள் தங்களது வங்கி பணியை வரும் 22ம் தேதியே முடித்துக் கொள்வது நல்லது.

News March 17, 2025

சாலை விபத்தில் கேரள பாடகர் பலி

image

கேரளாவில் பாடப்படும் முஸ்லிம் நாட்டுப்புற பாடல்களை அடிப்படையாக கொண்டது மாப்பிளாப்பாட்டு பாடல். இப்பாடலை பாடி புகழ்பெற்றவர் பைஜாஸ் உலியில். புன்னாட்டில் காரில் அவர் நேற்றிரவு பயணித்தபோது, எதிரே வந்த காரில் மோதி விபத்தில் சிக்கினார். இதில் காயமடைந்த பைஜாஸ் உலியில், ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டனர்.

News March 17, 2025

ஹிந்தி தேசிய மொழி… சந்திர பாபு அதிரடி

image

ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு சட்டப்பேரவையில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பேசியுள்ளார். மொழி வெறுப்பதற்கான ஒன்று அல்ல எனக் கூறிய அவர், ஆந்திராவில் தாய்மொழி தெலுங்கு, தேசிய மொழி ஹிந்தி, சர்வதேச மொழி ஆங்கிலம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே துணை முதல்வர் பவன் கல்யாண் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசியுள்ள நிலையில் தற்போது சந்திர பாபு நாயுடுவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!