News February 16, 2025

CM குடும்பத்திற்கு மட்டும் ஒரு நியாயமா? அண்ணாமலை

image

CM, அமைச்சர்களின் மகன், பேரன், பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில் மும்மொழிகள் பயிற்றுவிக்கும் போது, எங்கள் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்றும், உங்களது காலாவதியான 1960களின் கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம் எனவும் அவர் வினவியுள்ளார்.

Similar News

News December 6, 2025

மயிலாடுதுறை: பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து

image

கொள்ளிடம் அருகே ஆனந்த கூத்தன் பகுதியில் பைபாஸ் சாலையில், சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற கார், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது, காரின் பின்னால் வந்த மற்றொரு கார் மோதியதில், முன் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 6, 2025

திருவாரூர்: மழைக்கு இடிந்த வீடு-எம்எல்ஏ நேரில் ஆய்வு

image

முத்துப்பேட்டை, கோவிலூரைச் சேர்ந்தவர் பூமா(35). இவரின் வீடு கனமழை காரணமாக மழைநீர் ஊறி இருந்த நிலையில், வீட்டின் சுவர்கள் திடீரென்று இடிந்து விழுந்தன. இந்த நிலையில் இடிந்து விழுந்த வீட்டை எம்எல்ஏ மாரிமுத்து நேரில் பார்வையிட்டு வீட்டை இழந்த பூமாவுக்கு ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின்போது சிபிஐ ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, ரவி ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 6, 2025

உணவு விஷயத்தில் இந்த தவறு வேண்டாம்.. ஆபத்து!

image

நார்ச்சத்து, புரதம் இருக்கும் உணவுகளை சாப்பிட்டாலும் சோர்வாகவே உணர்கிறீர்களா? இதற்கு நீங்கள் சாப்பிடும் முறை காரணமாக இருக்கலாம். உணவை வேக வேகமாக மென்று விழுங்காதீங்க. இப்படி செய்தால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராது. அத்துடன் சுகர், இதய பிரச்னை, அஜீரணம் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனால் எவ்வளவு நல்ல உணவை சாப்பிட்டாலும் பிரயோஜனம் இல்லை. எனவே, உணவை பொறுமையாக மென்று சாப்பிடுங்கள். SHARE.

error: Content is protected !!