News March 18, 2025
இபிஎஸ்ஸூடன் மீண்டும் இணக்கமா?

இபிஎஸ்ஸை சந்திப்பதை சில வாரங்களாக தவிர்த்து வந்த செங்கோட்டையன் மீண்டும் இணக்கமாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்துவது போல் சட்டப்பேரவைக்கு வந்த செங்கோட்டையன், அதிமுக MLAக்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டுள்ளார். மேலும், பள்ளிக்கல்வித் துறை விவாதத்தின்போது செங்கோட்டையனை பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் இபிஎஸ் வாய்ப்பு கேட்டார்.
Similar News
News March 18, 2025
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நீக்கம்

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தர்மசெல்வன், அண்மையில் ஆட்சியர், எஸ்பியை மாற்றி விடுவேன் என <<15605340>>பேசியது<<>> சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பதவியில் இருந்து தர்மசெல்வன் நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மணி எம்பி நியமனம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 18, 2025
இதுதான் நாகதோஷமோ?… துரத்தி துரத்தி கடிக்கும் பாம்பு

ஆந்திராவில் விநோத நிகழ்வால் அவதிப்பட்டு வருகிறார் 50 வயதான சுப்ரமணியம். எங்கு சென்றாலும், தன்னை விரட்டி விரட்டி பாம்பு கடிப்பதாக அவர் குமுறுகிறார். 20 வயதில் தொடங்கி இப்போதுவரை பல டஜன் முறைகள் தன்னை பாம்பு கடித்ததாக கூறும் சுப்ரமணியம், வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தாலும் பாம்பு கடி தொல்லைக்கு தீர்வு கிடைக்கவில்லை என கவலை தெரிவிக்கிறார். சம்பாதிப்பது எல்லாமே சிகிச்சைக்கே செலவாகி விடுகிறதாம்.
News March 18, 2025
ரயில் விபத்துக்கள் 80% குறைந்துள்ளன: வைஷ்ணவ்

2014-15 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நிகழ்ந்த ரயில் விபத்துக்கள் 80% குறைந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். லாலு, மம்தா அமைச்சர்களாக இருந்த போது ரயில் விபத்துக்களின் எண்ணிக்கையை விட தற்போது விபத்துகள் குறைந்துள்ளதாகவும், இது மேலும் கட்டுப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். ரயில் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.