News August 23, 2025
வந்தா CM தானா? விஜய்யை சீண்டிய செல்லூர் ராஜு

தமிழகத்துக்கு ஒரு MGR மட்டும் தான் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். MGR-யை அனைவரும் கொண்டாடலாம், ஆனால் மக்களை பொறுத்தவரை MGR கட்சி என்றால் அது அதிமுக தான் என்றார். அண்ணாவிடம் பல வருடங்கள் அரசியல் பாடம் படித்த பின் தான் MGR அரசியலுக்கு வந்தார். ஆனால் காதல் பட நகைச்சுவை காட்சி போல் வந்தால் CM-ஆக தான் வருவேன் என விஜய் செயல்படுவதாக விமர்சித்தார்.
Similar News
News March 27, 2026
CPM-க்கு தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல்?

திமுக, காங்., வென்ற தொகுதிகளை CPM கேட்பதால், அக்கூட்டணியில் தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021-ல் CPM வெற்றிபெற்ற கந்தர்வகோட்டை, கீழ்வேளூர் தொகுதிகளை ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், திமுக வென்ற பல்லாவரம், காங்கிரஸ் வென்ற விளவங்கோடு தொகுதிகளையும் CPM கேட்பதால், தொகுதியை இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
இந்திய அணிக்கு அனுமதியில்லை… அதிர்ச்சி!

இந்திய கால்பந்தின் சோகக் கதை தொடர்கிறது. Asia cup qualifier ஆட்டத்தில் பங்கேற்க 10 ஆண்டுகளுக்கு பிறகு கொச்சி நேரு ஸ்டேடியம் சென்ற இந்திய அணியினரை உள்ளே விடாமல் தடுத்துள்ளது ஸ்டேடிய நிர்வாகம். கேரள கால்பந்து சங்கம் செக்யூரிட்டி டெபாசிட் கட்டாததே காரணமாம். கோடிக்கணக்கில் கிரிக்கெட்டுக்கு வரிச்சலுகை அளிக்கும் அரசு, கால்பந்தை இப்படி அலட்சியப்படுத்துவதா என விளையாட்டு ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News March 27, 2026
இபிஎஸ் மீது அதிருப்தியா? கௌதமி விளக்கம்

ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நடிகை கௌதமி களமிறங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அத்தொகுதி ஜான்பாண்டியனுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், கௌதமி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதை வதந்தி என்று திட்டவட்டமாக மறுத்துள்ள அவர், ஆட்சி மாற்றத்தை நோக்கி தனது முழு கவனமும் இருக்கிறது; தமிழகத்தை காப்பாற்ற அனைவரும் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.<<-se>>#TNElection2026<<>>


