News February 13, 2025

விதி மாற்றத்தால் விபரீதமா?

image

அதிமுகவின் BY-LAW என்ற உட்கட்சி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விதி தற்போது இபிஎஸ்-க்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சித் தொண்டர்களிடமே இருக்கும் என விதி வகுக்கப்பட்டிருந்தது. அதில் திருத்தம் செய்து நிர்வாகிகளே தேர்ந்தெடுக்கலாம் என்ற விதியை புகுத்தியது தான் இபிஎஸ்-க்கு பிரச்னையாகி இருக்கிறது.

Similar News

News February 13, 2025

ஜெய்ஸ்வால் நீக்கம் ஏன்? கம்பீர் விளக்கம்

image

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டது தொடர்பாக பயிற்சியாளர் கம்பீர் விளக்கமளித்துள்ளார். மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் பவுலர் தேவை என்பதால், ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் பந்துவீச்சில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும், அணியின் வெற்றிக்கு ஏற்ப வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கம்பீர் கூறியுள்ளார்.

News February 13, 2025

2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.. IMD எச்சரிக்கை

image

தமிழகத்தில் நாளை வெப்பம் அதிகரிக்கும் என்று IMD எச்சரித்துள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2- 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் IMD கூறியுள்ளது. இதேபோல், வருகிற 15ஆம் தேதியும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2- 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. உங்கள் பகுதியில் வெப்பம் எப்படி? கீழே பதிவிடுங்க.

News February 13, 2025

வங்கதேச கலவரத்தில் 1,400 பேர் சாவு.. ஐ.நா. தகவல்

image

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக கடந்தாண்டு போராட்டம் வெடித்தது. அதை கட்டுப்படுத்த ஷேக் ஹசீனா அரசு எடுத்த நடவடிக்கையால், பல இடங்களில் கலவரம் வெடித்தது. இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்த கலவரம் குறித்து ஐநா மனித உரிமை கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கலவரத்தில் ஏறத்தாழ 1,400 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!