News February 12, 2025
இந்த ஊரில் பெண் குழந்தை பிறந்தால் ஜாக்பாட் தான்?

ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பிப்லாந்த்ரி கிராமத்தில் ஒரு தனித்துவமான வழக்கம் உள்ளது. ஊரில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போது, 111 மரக்கன்றுகளை நடுகிறார்கள். மேலும், அக்குழந்தை 21 வயதை அடையும் போது அவளின் பாதுகாப்பிற்காக, கிராமவாசிகள் இணைந்து ₹21,000, பெற்றோர்கள் ₹10,000ஐ fixed depositல் போடுகிறார்கள். இப்பழக்கத்தை 2006ல், ஊர் தலைவராக இருந்த ஷியாம் சுந்தர் கொண்டு வந்துள்ளார்.
Similar News
News April 6, 2026
திண்டுக்கல்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (எ.கா. A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News April 6, 2026
விசில் ஊதினால் சளி சரியாகும்: செங்கோட்டையன்

குழந்தைக்கு சளி பிடித்திருந்தால் விசில் ஊதினால் போதும் சளி நின்றுவிடும் என செங்கோட்டையன் பேசியுள்ளார். திருச்செங்கோட்டில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மூச்சு பயிற்சி இதயத்துக்கு நல்லது என்பார்கள்; அதற்காக விசில் ஊதுங்கள் என்றார். மேலும், நாளை விசில் சின்னம் இந்தியாவையே ஆளப்போவதாகவும் அவர் பேசியுள்ளார். உங்கள் கருத்து? <<-se>>#TNElection2026<<>>
News April 6, 2026
மகளிர் வங்கியில் ₹50,000.. ராகுல் காந்தி வாக்குறுதி!

பிஹார் தேர்தலில் பாஜகவின் வியூகத்தை அசாமில் காங்., கையில் எடுத்துள்ளது. காங்., ஆட்சிக்கு வந்தால் பெண்கள் தொழில் தொடங்க தலா ₹50,000 வங்கிக் கணக்கில் வழங்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். மேலும், அனைத்து குடும்பத்துக்கும் ₹25 லட்சம் மதிப்பில் சுகாதார காப்பீட்டையும் அவர் அறிவித்துள்ளார். பிஹாரில் ‘MHRY’ திட்டத்தின் கீழ் பெண்கள் சுய தொழில் தொடங்க ₹10,000 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


