News September 26, 2025

அரசு நிகழ்ச்சியா? பாடல் வெளியீட்டு விழாவா?

image

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற அரசு நிகழ்ச்சி பாடல் வெளியீட்டு விழா போல இருந்தது என சீமான் விமர்சித்துள்ளார். 2,500 பள்ளிகளை மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடத்துவதா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பட்டப்படிப்பு முடித்து வரும் இளைஞர்களுக்கு தாய் மொழியில் எழுதத் தெரியவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Similar News

News September 26, 2025

யார் அந்த 2 பேர்? நீங்களே சொல்லுங்க!

image

‘நான் சவால் விடுகிறேன், அவரும் வரட்டும், நானும் வருகிறேன், என்ன செய்தோம் என்று விவாதிப்போம்’ என அரசியல்வாதிகள் பேசுவதை தொன்றுதொட்டு கேட்டு வருகிறோம். ஆனால், அவர்கள் ஒருமுறை கூட மேடை போட்டு எதிரெதிரே அமர்ந்து பேசியதில்லை. USA உள்ளிட்ட சில நாடுகளில் இது சாத்தியமாகியுள்ளது. இது இந்தியாவிலும் சாத்தியமானால் யார் யார் அமர்ந்து பேசலாம்? தமிழகத்தில் யாரை அமர வைக்கலாம் என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News September 26, 2025

GST உயர்ந்தும் விலை அதிகரிக்காத பைக்

image

சமீபத்திய GST சீர்திருத்தங்களின் அடிப்படையில், 350 cc-க்கு அதிகமான பைக்குகளுக்கான GST 28%-லிருந்து 40% ஆக அதிகரித்தது. இருப்பினும், பிரபல Harley Davidson நிறுவனம், விலையை ஏற்றாமல் இருக்கும் நிலையிலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது. இதனால் Harley Davidson x440 பைக்குகள் ₹2.40 லட்சம் – ₹2.80 லட்சம் விலையிலேயே விற்பனையாகின்றன. உயர் ரக Street Glide வகை பைக் ₹42.50 லட்சத்துக்கு விற்பனையாகிறது.

News September 26, 2025

இனி மாதம் ₹2000-ஆக உயர்வா?

image

மாணவ, மாணவிகளுக்கு மாதம் ₹1000-ஐ TN அரசு வழங்கி வருகிறது. இந்த தொகையை ₹2000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக உள்ளது. இந்நிலையில், நேற்று நடந்த ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பேசிய மாணவர் ஒருவர், ₹1000 போதவில்லை, உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்க, உடனே கைதட்டி சிரித்துக் கொண்டே CM ஸ்டாலின் வரவேற்றார். தேர்தலுக்கு முன், இதுபற்றி அறிவிப்பு வெளியாகலாம்.

error: Content is protected !!