News August 21, 2025
குங்குமம் கொட்டினால் அபசகுணமா?

குங்குமம் கொட்டினால், பெரிய அபசகுணம் என அலறுவார்கள். மேலும் வீட்டுப் பெண்களுக்கு தாலிக்கு ஆபத்து என்றும் நம்பப்படுகிறது. திருமணமான பெண்களின் அடையாளமாக குங்குமம் இருப்பதால், இவ்வாறான கருத்து நிலவுகிறது. குங்குமம் கொட்டுவதால், தீங்கு நடந்ததாக சிலர் சொன்னாலும், அதெல்லாம் Coincidence மட்டுமே. கைதவறினாலும், பசங்க விளையாடும் போது குங்கும சிமிழி கீழே விழுந்தாலும், மனம் சஞ்சலப்பட வேண்டாம்!
Similar News
News January 15, 2026
திருவள்ளூர்: கணவன் தொல்லையா? உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திருவள்ளூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8098822551-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 15, 2026
பொங்கல் அன்று இதை செய்தால் அதிர்ஷ்டம் கொட்டும்

பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறீர்களா? உங்களுடைய பிரச்னை சரியாக ஐதீகம் சில வழிமுறைகளை சொல்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள், கோயிலுக்கோ அல்லது ஏழைகளுக்கோ சுத்தமான நெய் மற்றும் வெல்லத்தை தானமாக வழங்கலாம். வெல்லம் சூரியனுடனும், நெய் சுபிட்சத்துடனும் தொடர்புடையது. இந்த தானம் உங்கள் செல்வத்தை மேம்படுத்தும் என்கின்றனர். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 15, 2026
TN-ஐயும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது: அமைச்சர்

பண்டைய தமிழகம் ஆன்மிக பூமியாக திகழ்ந்தது, ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், TN-ஐயும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது இரண்டும் பின்னிப்பிணைந்தவை என்றார். ஆனால், சமீபமாக சனாதனம் மீதான மாண்பு குறைந்து வருகிறது எனவும் அது குறித்து கேலியும் விமர்சனமும் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.


