News October 3, 2025
இன்ஸ்டகிராம் நம்மை ஒட்டுக்கேட்கிறதா?

ஒரு பொருளை பற்றி பேசிய சிறிது நேரத்தில் அது தொடர்பான விளம்பரத்தை இன்ஸ்டாவில் பார்க்கமுடியும். இதனால் இன்ஸ்டா நம்மை ஒட்டுக்கேட்கிறதா என்ற கேள்வி எழும். ஆனால் இன்ஸ்டா ஒட்டுக்கேட்பதில்லை என அதன் தலைவர் ஆடம் மறுத்துள்ளார். பிரவ்சிங் ஹிஸ்டரியை வைத்தே விளம்பரங்கள் வரும் எனவும் விளக்கமளித்துள்ளார். அதேபோல் உங்கள் நண்பர்களின் விருப்பங்களை வைத்தும் விளம்பரங்கள் வருமாம்.
Similar News
News October 3, 2025
வைட்டமின் D பெற என்ன செய்யலாம்?

உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் D இல்லாமல் இருந்தால், மூட்டு வலி, தசைப்பிடிப்பு, உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம். வைட்டமின் D பெற என்ன சாப்பிடலாம்? என்ன செய்யலாம்? என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில் இல்லாமல், வேறு ஏதேனும் உங்களுக்கு வைட்டமின் D நிறைந்த உணவு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News October 3, 2025
கரூர் துயரத்திற்கு CM ஸ்டாலின் தான் பொறுப்பு: NDA குழு

கரூர் துயரத்திற்கு CM ஸ்டாலினே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என NDA குழு தெரிவித்துள்ளது. CM-க்கு NDA குழு அனுப்பிய கடித்ததில், தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் நெரிசல் ஏற்பட காரணம் என்ன? நெரிசலுக்கு வழிவகுத்த முதன்மைக் காரணிகள் குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் உரிய நேரத்திற்குள் CM-ன் பதிலை எதிர்பார்ப்பதாகவும் NDA குழு கூறியுள்ளது.
News October 3, 2025
BREAKING: விஜய் முக்கிய அறிவிப்பு

தவெக வழக்கில் ஐகோர்ட் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த நிலையில், கட்சியினருக்கு விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சியின் மா.செ.,-க்களிடம் வாட்ஸ்ஆப் காலில் பேசிய அவர், கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம், புதிய உத்வேகத்துடன் பணியாற்றுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், தவெகவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது வழக்கு பதிந்தால் சட்ட உதவிகளை வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.