News April 19, 2025
இந்தி கட்டாயமா? அனுமதிக்க மாட்டோம்

மகாராஷ்டிராவில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் என்று மாநில அரசு அறிவித்திருப்பதற்கு சிவசேனா (UBT) கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, இந்தி மீது தனது கட்சிக்கு எந்த வெறுப்பும் இல்லையென்றும், அது கட்டாயமாக்கப்படுவதை மட்டுமே எதிர்க்கிறோம் என்றும் கூறினார். தமிழக அரசும் இதே கருத்தைதான் முன் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 7, 2025
காரைக்குடியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள பேயன்பட்டியை சேர்ந்த சுப்பு என்பவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் மலைப் பாம்பு இருப்பதாக காரைக்குடி தீயணைப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தீயணைப்பு வீரர்கள் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையிடம் நேற்று ஒப்படைத்தனர்
News December 7, 2025
குளிர்காலத்திலும் முகம் பளபளக்க ‘4’ டிப்ஸ்

★குளிர்காலத்திலும் சன்ஸ்கிரீன் பயன்படுவது, சருமத்தை பளபளப்பாக்கும் ★சரும ஆரோக்கியத்திற்கு ஆரஞ்சு, திராட்சை போன்ற வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களை சாப்பிடவும் ★அதிகமாக குளிர்கிறது என்று, ஓவர் சூடான நீரில் குளிக்க வேண்டாம். அது சருமத்தை வறட்சியாக்கும் ★உடலில் நீரிழப்பு ஏற்படும்போது சருமம் வறண்டு விடும். எனவே, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களுக்கு தெரிஞ்ச சில டிப்ஸ சொல்லுங்க.
News December 7, 2025
கனடா எல்லையில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் எல்லையில் 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. வனப்பகுதியில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றாலும், இந்த வனப்பகுதிக்கு அருகே 91 கி.மீ., தூரத்தில் மக்கள் வசிப்பதாக USGS தெரிவித்துள்ளது. இந்நிலையில், சேதம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.


