News December 21, 2024
பாப்கார்னுக்கும் வருகிறது GST?

Second Hand கார்களுக்கான GST வரியை 12%ல் இருந்து 18% ஆக உயர்த்த GST கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் உப்பு, கார வகை ரெடிமேட் பாப்கார்னுக்கு 5%, பேக்கிங்கில் இருக்கும் பாப்கார்னுக்கு 12% மற்றும் இனிப்பான Caramel வகை பாப்கார்னுக்கு 18% GST விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 50% Fly Ash இருக்கும் கான்கிரீட் பிளாக்குகளுக்கான GST 18% இருந்து 12ஆக குறைகிறது.
Similar News
News July 5, 2025
தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News July 5, 2025
புதினாவுக்குள் இவ்வளவு ரகசியம் இருக்கா?

புதினாவை பிரியாணி உள்ளிட்ட உணவுகளில் வாசனைக்காக பயன்படுத்தும் பொருள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. தலைவலி முதல் பாதங்களில் ஏற்படும் வலி வரை சரிசெய்ய புதினா உதவும். *அஜீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் *நாள்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி பிரச்சினையைச் சரிசெய்யும் *பெப்பர்மின்ட் ஆயில் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்கும் * பெப்பர்மிண்ட் ஆயிலில் மசாஜ் செய்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.
News July 5, 2025
நீரவ் மோடியின் தம்பி அமெரிக்காவில் கைது

வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். நீரவ் மோடியின் மோசடியில் நேஹலுக்கும் தொடர்புள்ளதாக கூறி இந்திய அதிகாரிகள் அளித்த நோட்டீஸில் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த நீரவ் மோடி, 2018-ல் இந்தியாவில் இருந்து தப்பிய நிலையில், லண்டனில் 2019-ல் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.