News August 14, 2024
பூண்டு காய்கறியா OR மசாலாவா? நீதிமன்றம் தீர்ப்பு

பூண்டு காய்கறியா அல்லது மசாலாப் பொருளா என்ற விவாதத்துக்கு ம.பி நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2015ஆம் ஆண்டு ம.பி விவசாயிகள் பூண்டை, அம்மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியத்தில் முறையிட்டு காய்கறி வகையில் சேர்த்தனர். இதை ஏற்க மறுத்த அம்மாநில விவசாய துறை, 1972 வேளாண் சட்டத்தின் படி மசாலாப் பொருளாக அறிவித்தது. இதை எதிர்த்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பூண்டு காய்கறிதான் என்று தீர்ப்பளித்தது.
Similar News
News November 22, 2025
ஈரோட்டில் அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் காந்தி, நேரு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி டிச.4, 5 ஆகிய தேதிகளில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, 2-வது பரிசாக ரூ.3,000, 3-வது பரிசாக ரூ.2,000 வழங்கப்படும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
பனையூரை ஃபோகஸ் செய்யும் அமித்ஷா.. பின்னணி என்ன?

அமித்ஷா டிசம்பர் இறுதிக்குள் சென்னை வர திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த விசிட்டில் கூட்டணி, சீட் ஷேரிங் பற்றி இறுதி செய்வதோடு, தவெக தரப்பிடம் கூட்டணி பற்றி அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக 3 நாள்கள் சென்னையிலேயே அவர் முகாமிட ஆலோசனைகள் நடந்துவருகிறதாம். அமித்ஷா பேச்சுவார்தை நடத்தினால், விஜய் கூட்டணிக்கு பிடிகொடுப்பாரா?
News November 22, 2025
12th பாஸ் போதும்.. ரயில்வேயில் 3,058 பணியிடங்கள்!

இந்திய ரயில்வேயில் 3,058 Ticket Clerk, Accounts Clerk காலிப் பணியிடங்கள் உள்ளன. Ticket Clerk பணிக்கு 12-வது பாஸ் செய்திருந்தால் போதும். Accounts Clerk பணிக்கு டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு ₹20,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. நவ.27-க்குள் <


