News August 11, 2024

தமிழ்நாட்டுக்கு பார்முலா 4 RACE அவசியமா?: ஜெயக்குமார்

image

தமிழ்நாட்டுக்கு பார்முலா 4 கார் RACE அவசியமா என ADMK மூத்த தலைவர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் இம்மாத இறுதியில் பார்முலா 4 ரேஸ் நடத்த ஏற்பாடு நடக்கிறது. இதை எதிர்த்து அதிமுக வழக்கு தொடுத்தது குறித்த கேள்விக்கு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை, போதைப் பொருள் கடத்தல் என பல பிரச்னை இருக்கையில் பார்முலா 4 ரேஸ் அவசியமா என கருதியே அதிமுக வழக்கு தொடுத்துள்ளது என்று பதிலளித்தார்.

Similar News

News March 13, 2026

வீட்டு சிலிண்டர் கிடைக்காது.. BIG SHOCKING

image

போர் பதற்றத்துக்கிடையே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இன்னும் 2 வாரங்களுக்கு இதே நிலை நீடித்தால் வீட்டு உபயோக சிலிண்டர் கூட கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாட்டால் சாலையோர கடைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

News March 13, 2026

தவெகவுடன் கூட்டணியா? ரங்கசாமி கூறினார்

image

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இதனால், தவெகவுடன் அக்கட்சி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு, அவ்வாறு தவெகவுடன் பேச்சுவார்த்தை நடந்தால் முதலிலேயே கூறிவிடுகிறேன் என்று புதுவை CM ரங்கசாமி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நன்றாக நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 13, 2026

OBC கிரீமி லேயர் ஒதுக்கீட்டில் SC முக்கிய தீர்ப்பு

image

பிற்படுத்தப்பட்டோருக்கான(OBC) கிரீமி லேயர் நிலையை பெற்றோரின் வருமானத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது என்று SC தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை, சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், பெற்றோரின் வருமானத்தை காரணம் காட்டி பணி நியமனம் மறுக்கப்பட்டு வந்தவர்களுக்கு இது நிம்மதியை அளித்துள்ளது. அவர்களின் நியமனங்களை மறுத்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்களை SC தள்ளுபடி செய்துள்ளது.

error: Content is protected !!