News May 14, 2024
FLiRT வகை கொரோனா ஆபத்தானதா?

இந்தியாவில் தற்போது பரவிவரும் FLiRT வகை கொரோனா வைரஸ் குறித்த முழுமையான தகவல்கள் ஏதும் ஆய்வாளர்களிடம் இல்லை. ஆனால், இவை நோய் எதிர்ப்பு சக்தியை மீறி உடலினை தாக்கும் திறன் கொண்டவை என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களில் 1 சதவீதத்தினருக்கு மட்டுமே FLiRT வகை தொற்று உள்ளதால், இதன் வீரியத் தன்மை குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.
Similar News
News March 11, 2026
டெல்லி பாஜக மீது அண்ணாமலை அதிருப்தியா?

மாநில தலைவர் பதவியைவிட பெரிய பதவி எதுவும் வழங்கப்படாததால், பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருந்ததாக பேசப்பட்டது. இதனால்தான், தந்தையை கவனிக்க வேண்டும் என கூறி சமீபத்தில் தேர்தல் பணிக்கான பதவியை அவர் மறுத்தார் என்றனர். இந்நிலையில், கோவை (அ) திருப்பூரில், ஏதேனும் ஒரு தொகுதியை எடுத்துகொள்ளலாம் என மீண்டும் ஒரு ஆஃபர் கொடுக்கப்பட்டதாம். ஆனால் அதையும் அவர் மறுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
News March 11, 2026
CM ஸ்டாலினின் கூட்டத்தில் 2 பேர் மரணம்

திருச்சியில், நேற்று முன்தினம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் 2 பேர் மரணமடைந்தனர். புதுக்கோட்டை, மங்களநாட்டை சேர்ந்த ஜெயராமன்(67) மாநாட்டு திடலில் அமர்ந்திருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அதேபோல், பெரம்பலூரை சேர்ந்த சரோஜா(61) மாநாட்டு மைதான வாயிலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவ்விவகாரத்தை திமுக திட்டமிட்டு மறைத்துவிட்டதாக பாஜக, தவெகவினர் SM-ல் விமர்சித்து வருகின்றனர்.
News March 11, 2026
வீட்டு சிலிண்டர் புக்கிங்கிலும் சிக்கல்

வளைகுடா போர் பதற்றத்தால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் வணிக சிலிண்டர் புக்கிங் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் புக்கிங்கிலும் சிக்கல் எழுந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. செல்போன் மூலம் சிலிண்டர் புக் செய்ய முயன்றால், ‘சுவிட்ச் ஆப்’ என பதில் வருவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். உங்கள் பகுதியில் இதுபோன்ற பிரச்னை இருக்கிறதா?


