News April 16, 2025
EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல்?

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், மேல் விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஐகோர்ட் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தற்போது கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததால், விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
Similar News
News December 13, 2025
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 30 தொகுதிகளா?

கடந்த 2021 தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால், கடந்த முறையை விட சுமார் 30 தொகுதிகள் கூடுதலாக கேட்டு பாஜக, டிமாண்ட் வைத்ததாக பேச்சு அடிபட்டது. இந்நிலையில், 50 தொகுதிகள் தர முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் EPS, 30 தொகுதிகள் வரை ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். டெல்லிக்கு விரைந்துள்ள நயினார், அமித்ஷாவிடம் இதுகுறித்து ஆலோசனை செய்யவிருக்கிறாராம்.
News December 13, 2025
மெஸ்ஸியை சந்திக்கிறாரா ராகுல் காந்தி?

‘GOAT இந்தியா டூர்’ நிகழ்வின் ஒரு பகுதியாக மெஸ்ஸி இன்று ஹைதராபாத் செல்கிறார். அங்கு, CM ரேவந்த் ரெட்டி தலைமையிலான கால்பந்து அணி, மெஸ்ஸி தலைமையிலான அணியுடன் நட்பு போட்டியில் விளையாடுகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போட்டிக்கு முன்னதாக ராகுல், மெஸ்ஸியை அவர் தங்கும் அரண்மனைக்கே சென்று சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.
News December 13, 2025
தமிழ் நடிகை மரணம்… பரபரப்பு தகவல்

நடிகை ராஜேஸ்வரியின் தற்கொலைக்கான காரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. <<18549358>>பணப்பிரச்னை<<>> தொடர்பாக கணவன் சதீஷுடன் ஏற்பட்ட மோதலே அவரது மரணத்திற்கு காரணம் என முதலில் தகவல் வெளியாகியிருந்தது. தற்போது புதிய திருப்பமாக, நடிப்புத் தொழிலை கைவிடுமாறு கணவன் முட்டுக்கட்டை போட்டதே ராஜேஸ்வரியின் மரணத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


