News April 21, 2025
அனைத்திற்கும் கருணாநிதி பெயரா?.. சீமான் காட்டம்

டாஸ்மாக் கடைகளைத் தவிர அனைத்து அரசு கட்டடங்களுக்கும் கருணாநிதி பெயரைச் சூட்டுவதை திமுக வாடிக்கையாக வைத்திருப்பதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இருக்கும் தலைவர்களின் பெயரை மாற்றி கருணாநிதி பெயர் சூட்டுவதுதான் திராவிட மாடலா என்றும் அவர் வினவியுள்ளார். தலைவர்களின் பெயரில் இருக்கும் சிறுசிறு அடையாளங்களையும் அழிக்க திமுக அரசு முயல்வதை ஏற்க முடியாது என சீமான் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 30, 2025
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து கொலை

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், மேலும் ஒரு இந்து நபர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடை தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்த பஜேந்திர பிஸ்வாஸை (42), சக காவலாளி நோமன் மியா (29) சுட்டுக் கொன்றார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, கவனக்குறைவால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வாரங்களில் நடந்த 3-வது கொலை இதுவாகும்.
News December 30, 2025
நடிகை நந்தினி மரணம்… அதிர்ச்சித் தகவல்

நடிகை நந்தினியின் மரணத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், குடும்ப பிரச்னையால் சோக முடிவை எடுப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீஸ் நடத்திய விசாரணையில், நடிப்பை கைவிடுமாறு அவரது தாய் வற்புறுத்தியதாகவும், அதனால் நந்தினி மனமுடைந்து இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால், துப்பட்டாவில் தூக்கு போட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
News December 30, 2025
2025-ல் அதிகம் சொத்து சேர்த்தது இவர்கள் தான்!

2025-ம் ஆண்டு நாளையுடன் நிறைவடைய உள்ளது. இந்த ஆண்டில் பல தொழிலதிபர்கள் பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்துள்ள நிலையில், சிலர் பல லட்சம் கோடிகளை இழந்துள்ளனர். அந்த வகையில், 2025-ம் ஆண்டில் மட்டும் அதிகம் சொத்து சேர்த்த, இழந்த தொழிலதிபர்கள் தொடர்பான விவரங்களை மேலே தொகுத்துள்ளோம். அதை ஒவ்வொன்றாக Swipe செய்து பாருங்கள்.


