News March 25, 2025
அமித்ஷாவை சந்திக்கிறார் இபிஎஸ்?

டெல்லியில் இன்று மாலை அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டும் உள்ள நிலையில், பேரவைக் கூட்டம் நடைபெற்று வரும் சூழலில் அமித்ஷாவை அவர் சந்திப்பது முக்கித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்து புகார் அளிக்க சென்றதாக ஒருதரப்பினரும், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சென்றதாக மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.
Similar News
News November 28, 2025
தாதா பிணத்துடன் கலாட்டா! ரிவால்வர் ரீட்டா முழு Review!

பர்த்டே பார்ட்டி கொண்டாட தயாராகும் கீர்த்தி சுரேஷின் வீட்டார் அடுத்தடுத்து எதிர்கொள்ளும் எதிர்பாராத ட்விஸ்டுகள் தான் ‘ரிவால்வர் ரீட்டா’ *பிளஸ்: ராதிகாவின் காமெடி டைமிங் அசத்தல். கீர்த்தி சுரேஷ் கச்சிதம். முதல் பாதி செம கலாட்டா. இசை, ஒளிப்பதிவு படத்துக்கு பலம் *பல்ப்ஸ்: 2-ம் பாதியில் வரும் அதிக ட்விஸ்டுகள் கொஞ்சம் சலிப்படைய வைக்கிறது. Verdict: நல்ல கதையும், சுமாரான திரைக்கதையும்! Rating: 2.25/5.
News November 28, 2025
‘வந்தே மாதரம்’ கோஷத்துக்கு தடை: காங்., கண்டனம்

நாடாளுமன்றத்தில் கண்ணியத்தை பேணும் வகையில், ‘வந்தே மாதரம்’, ‘ஜெய் ஹிந்த்’ போன்ற கோஷங்களை பயன்படுத்த கூடாது என்று ராஜ்யசபா செயலகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்., சுதந்திர போராட்ட முழக்கங்களை எழுப்புவதில் பாஜகவுக்கு என்ன பிரச்னை என கேள்வி எழுப்பியுள்ளது. இந்த உத்தரவு, சுதந்திரத்தின் போது இந்த முழக்கங்களுக்கு பிரிட்டிஷ் எதிர்ப்பு தெரிவித்ததற்கு சமம் என்றும் காங்., சாடியுள்ளது.
News November 28, 2025
RED ALERT: இங்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

ரெட் அலர்ட்-ஐ தொடர்ந்து நாளை(நவ.29) கடலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘டிட்வா’ புயல் எதிரொலியால் நாளை மயிலாடுதுறை, செங்கல்பட்டு, விழுப்புரத்திற்கும் IMD ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டங்களுக்கும் விடுமுறை விடப்படுவது குறித்து கலெக்டர்கள் ஆலோசித்து வருகின்றனர். முன்னதாக தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


