News March 26, 2025
எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியா?

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இபிஎஸ் ஏதோ நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பாஜக உடன் அரசியல் உறவே கிடையாது எனக் கூறிய இபிஎஸ், என்ன நிர்பந்தத்தில் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார் என தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது, கல்யாண தேதி இன்னும் தெரியவில்லை’ எனவும் முத்தரசன் விமர்சித்தார்.
Similar News
News March 30, 2025
ஓய்வு பெற்றார் சரத் கமல்

அர்ஜூனா, பத்மஸ்ரீ, கேல் ரத்னா விருதுகளை வென்றுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஓய்வு பெற்றார். தமிழகத்தைச் சேர்ந்தவரான இவர், 10 முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருக்கிறார். இன்று சென்னையில் நடைபெற்ற ஸ்டார் கண்டெண்டர் போட்டித் தேர்வில் தோல்வுற்றதையடுத்து, அவர் ஓய்வு பெற்றிருக்கிறார். இவர் காமன்வெல்த் போட்டிகளில் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் வென்றிருக்கிறார்.
News March 29, 2025
நினைவுகளின் விசித்திர அனுபவம்

நினைவுகள் எப்போதும் சிறப்பானவை தான். கடந்த காலத்தில் நாம் அழுத கணங்களை நினைவுகூர்ந்து, அட இதற்கா நாம் அவ்வளவு கவலைப்பட்டோம் என்று சில சமயங்களில் நாம் சிரிக்கிறோம். அதேநேரம் நாம் சிரித்து மகிழ்ந்த காலங்களை நினைத்து, மீண்டும் அந்த காலம் வாராதா என்று ஏங்கி அழவும் செய்கிறோம். இது தானே வாழ்க்கை!
News March 29, 2025
எக்ஸ் தளத்தை விற்ற எலான்… யாருக்கு தெரியுமா?

சேட்டை பிடிச்ச செயல்களை செய்யும் எலான் மஸ்க் தனது X தளத்தை விற்பனை செய்திருக்கிறார். வேறு யாருக்கும் இல்லை. அவருக்கே விற்பனை செய்திருக்கிறார். புரியவில்லையா? X நிறுவனத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு தனது மற்றொரு நிறுவனமான X AI கையகப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், X AI உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆய்வு நிறுவனமாக மாறியுள்ளதாகவும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.