News August 26, 2025
EB Bill எகிறுதா? குறைக்கும் வழிமுறைகள் இதோ!

உங்களுடைய EB Bill வழக்கமாக கட்டும் தொகையை விட அதிகமாக வருவதாக தோன்றுகிறதா? இவை காரணமாக இருக்கலாம் ▶8 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட மின்சாதன பொருள்களை தூக்கிவீசுங்கள் ▶பராமரிக்கப்படாத AC-ஆல் மின்கட்டணம் உயரலாம் ▶TV போன்ற சாதனங்கள் OFF-ல் இருக்கும்போதும் மின்சாரத்தை உறிஞ்சும். அதனால் அதனை Unplug செய்யுங்கள் ▶மின்சாரத்தை குறைவாக ஈர்க்கும் LED BULB-களை பயன்படுத்தலாம். SHARE IT.
Similar News
News August 26, 2025
Sinquefield Chess: 5-வது முறையாக டிரா செய்த பிரக்ஞானந்தா!

கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டி USA-வில் நடந்து வருகிறது. இதன் 6-வது சுற்றில் போலந்தின் டுடா ஜன் கிர்சிஸ்டோப்வை சந்தித்த பிரக்ஞானந்தா, 32-வது நகர்த்தலில் டிரா செய்தார். இத்தொடரின் முதல் சுற்றில் மட்டுமே வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, அதன் பிறகு தொடர்ச்சியாக சந்தித்த 5-வது டிரா இதுவாகும். 9 சுற்றுகள் கொண்ட தொடரில் 4.5 புள்ளிகளுடன் அவர் 2-வது இடத்தில் உள்ளார்.
News August 26, 2025
BREAKING: அமைச்சர் ஹாஸ்பிடலில் அனுமதி

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் குழு, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 26, 2025
தனது பிறந்த தினத்தை மாற்றிய அன்னை தெரசா.. ஏன்?

’அன்பின் கை’ அன்னை தெரசாவின் பிறந்தநாள் இன்று. அன்னை தெரசா எனும் ஆக்னஸ் பிறந்தது என்னவோ ஆக.26, 1910-ல் தான். ஆனால் அவரோ ஆக.27-ஐ தான் தன்னுடைய பிறந்தநாளாக கருதி வாழ்ந்துள்ளார். தெரசா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால், இவர் பிறந்த அடுத்த நாளிலேயே (ஆக.27) ஞானஸ்நானம் எடுக்கப்பட்டுள்ளது. கடவுள் மீதிருந்த அதீத பக்தியால் ஞானஸ்நானம் எடுத்த தினத்தையே தன்னுடைய பிறந்தநாளாக அவர் கருதியுள்ளார்.