News May 14, 2024
வேகமாக சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்னையா?

உணவை பொறுமையாக, நிதானமாக வாயில் அசைபோட்டு சாப்பிட வேண்டும். ஏனென்றால், வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்களில் முக்கியமான ஒன்று எடை அதிகரிப்பு . விரைவாக சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்த உதவும். இதனால் குடல் ஹார்மோன்கள் சீர்குலைத்து உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு இன்சுலின் பாதிப்பு ஏற்பட்டு, சர்க்கரை நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.
Similar News
News August 22, 2025
இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள்… CM ஸ்டாலின் அறிவுரை

உங்களின் ரோல் மாடல்களை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள் என்று மாணவர்களுக்கு CM ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். சென்னை குட் ஷெப்பர்ட் பள்ளி நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய அவர், SM-களில் ரீல்ஸ் பார்ப்பதெல்லாம் ரியாலிட்டி அல்ல. லைக்ஸ்கள் பெறுவதில் அல்ல, படித்து மார்க், டிகிரி பெறுவதுதான் கெத்து என்றார். பொழுதுபோக்கு வாழ்க்கையின் ஒரு அம்சம் தானே தவிர, அதுவே வாழ்க்கையல்ல என்றும் அவர் அறிவுறுத்தினார்.
News August 22, 2025
Parenting:குழந்தை ஃபோன் பார்த்துட்டே சாப்பிடுதா? உஷார்

குழந்தைகள் சாப்பிட மறுப்பதால் Modern பெற்றோர் அவர்கள் கையில் ஃபோனை கொடுத்து உணவை ஊட்டுவதை வழக்கமாக்கிவிட்டனர். ஆனால் அப்படி செய்வதால் குழந்தைகளுக்கு பல பிரச்னைகள் ஏற்படுகிறதாம். ஃபோன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் செரிமானப் பிரச்னைகளில் இருந்து தொடங்கி ஊட்டச்சத்து குறைபாடு, கவனச்சிதறல், குடும்பத்துடன் பிணைப்பு இல்லாமல் போவது போன்ற பிரச்னைகள் அதிகரிக்குமாம். உஷார் பெற்றோர்களே!
News August 22, 2025
‘அம்மா, அப்பா நான் சாகப்போறேன்’.. சோக முடிவு

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா பார்லிமென்டில் நிறைவேறியுள்ள நிலையில், லக்னோவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளான். ‘எனது விளையாட்டால் நீங்கள்(பெற்றோர்) கவலை அடைந்துள்ளீர்கள். எனது மரணத்திற்கு யாரையும் குறை கூறவில்லை. நீங்கள் ஒருவரையொருவர் கவனித்து கொள்ளுங்கள் என உருக்கமான கடிதம் எழுதிவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளான். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.